நிலக்கரி ஊழல்: இஸ்பத் நிறுவன இயக்குனர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டாவுக்கு 4 ஆண்டு சிறைநிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் இஸ்பத் நிறுவன இயக்குனர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டாவுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின்பேரில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., பல்வேறு நிறுவனங்கள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாரத் பராஷர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஜார்க்கண்ட் இஸ்பத் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று. 


இந்நிறுவனம் மற்றும் இதன் இயக்குனர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் மீது தவறான தகவல்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இஸ்பத் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். பின்னர் தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இதையடுத்து தண்டனை விவரம் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.


அதன்படி இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, இஸ்பத் நிறுவன இயக்குனர்களான ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் அபராதமும், இஸ்பத் நிறுவனத்திற்கு 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது