நடுத்தெரு ஊ.ஒ.தொடக்கப் பள்ளியின் 77ம் ஆண்டு விழா-படங்கள் இணைப்பு

நேற்று நடுத்தெருவில் அமைந்திருக்கும் ஊ.ஒ.தொடக்கப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. துவக்கத்தில் வாழ்த்துரை வழங்கிய காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜனாப் எஸ்.கே.எம்.ஹாஜா முஹைதீன் அவர்கள் 77 வது ஆண்டு விழாவை காணும் ஊ.ஒ.தொடக்கப் பள்ளியின் வாழ்த்துரையில் கலந்து கொள்ளும் தனக்கு 76 வயது தான், அதாவது இப்பள்ளியை  விட ஒரு வயது குறைவானவன் என்று குறிப்பிட்டு பள்ளியின் பழம் பெருமையை சுட்டிக்காட்டினார். அத்துடன் வருங்காலத்தில் உயர் நிலைப் பள்ளியாக திகழ வேண்டும் என்றும் தனது வாழ்த்தை வெளிப்படுத்தினார். உயர்திரு ரவிச்சந்திரன் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். இதில் மாணவர்களின் பல்வேறு நிகழ்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது, குறிப்பாக நாடகம், சிறுவர், சிறுமிகள் ஆட்டம், பரேடு மற்றும் டேவிட் சாரின் வில்லு பாட்டு ஆகியவை. இதில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக ஊக்கதொகை வழங்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் திரளாக கலந்து கொண்டு ஆண்டு விழாவினை சிறப்பித்து கொண்டிருக்கின்றனர்.

Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது