தஞ்சை, நாகை, திருவாரூரில் 9 இடங்களில் இன்று ரெயில் மறியல் விவசாய சங்கங்களின் கூட்டியக்க துணைத்தலைவர் தகவல்.



கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) 9 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியக்க துணைத்தலைவர் காவிரி தனபால் கூறினார்.

ரெயில் மறியல்
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய விவசாய ஆணைய பா¤ந்துரையை தமிழக அரசு ஏற்க வேண்டும், தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) விவசாய சங்க கூட்டியக்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

இந்த நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டியக்க துணைத்தலைவர் காவிரி தனபால் கும்பகோணத்தில் நேற்று கூறுகையில்,

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கும்பகோணம், பூதலூர், தஞ்சை, நீடாமங்கலம், மன்னார்குடி, திருவாரூர், நாகை, சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 9 இடங்களில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்க நிர்வாகிகள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது