கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்: வெங்கய்யா நாயுடுமாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்ததும் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய தொழில்வர்த்தக சபையினருடன் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு கலந்துரையாடினார். அப்போது தொழில் வர்த்தக சபை சார்பில் தயாரிக்கப்பட்ட சங்க பாடல் சி.டி.யை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:
கோவை வர்த்தகத்துக்கு ஏற்ற நகரம். இங்கு தொழிலுக்கு சிறப்பான வசதிகள் நிறைய உள்ளன. மத்திய அரசு அனைத்து விஷயத்திலுமே வெளிப்படையாக செயல்படுகிறது. லஞ்சம், ஊழல்கள் இல்லாமல் சிறப்பான முறையில் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தி வருகிறார். ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் இருப்பவர்கள் கியாஸ் மானியத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று 93 லட்சம் பேர் அதை திருப்பி கொடுத்து உள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை பிரதமர் தொடங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசின் உதவிகள் அனைத்துமே முழுமையாக ஏழை மக்களை சென்றடைகிறது. தொழில் வளர்ச்சியை பெருக்க முத்ரா வங்கி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான பேர் பயன் அடைந்து வருகிறார்கள். யோகா முதல் விவசாயம் வரை அனைத்திலும் மோடி சிறப்பாக செயல்படுகிறார்.

விவசாயத்துக்காக ஏராளமான நல்லத் திட்டங்களை அறிவித்து கொண்டு வந்து உள்ளார். கோவையை பொறுத்தவரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையாததால் அந்த பணி தாமதமாகிறது. மாநில அரசாங்கம் நிலம் கையகப்படுத்தி கொடுத்ததும் விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கும்.  மேலும் கோவையில் மத்திய அரசின் பல்கலைக்கழகம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள். இது தொடர்பாக ஸ்மிருதி ராணியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

4 வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாட்டு இறைச்சி சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. ஆனால் அதை ஒரு விழாவாக எடுத்து பிறரது மனதை புண்படுத்தக்கூடாது. நாடு முழுவதும் 745 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 5 பல்கலைக்கழகங்களில் மட்டுமே பிரச்சினைகள் உள்ளன.

மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நமது கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ள கூடாது. நாட்டில் வசிப்பவர்கள் இந்துவாக இருந்தாலும், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாராக இருந்தாலும் பாரத அன்னைக்கு வணக்கம் செலுத்த வேண்டும். இதை அரசியல் ஆக்குவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அய்யா, அம்மா, அண்ணன் என யார் ஆட்சி அமைத்தாலும், அவர்களுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது