துணை விமானி மது போதையில் இருந்ததால் விமானம் ரத்து | அமெரிக்கா



அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இதனால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவில் டெட்ராஸ்ட்டில் இருந்து பிலாடெல்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதற்காக டெட்ராய்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர்.

அப்போது அந்த விமானத்தை ஓட்டி செல்லும் விமானி மற்றும் துணை விமானியை மது போதை பரிசோதனை நடத்தினர். அப்போது துணை விமானி அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த விமானி கைது செய்யப்பட்டார். 50 வயது மதிக்கத்தக்க அவர் பென்சில்வேனியாவை சேர்ந்தவர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

துணை விமானி மது போதையில் இருந்ததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்துக்கு விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது