தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறப்புதஞ்சாவூர்,

தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டுள்ளது.

புதிய ஏ.டி.எம். மையம்
தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் தபால் துறை சார்பில் புதிய ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா நேற்றுகாலை நடந்தது. விழாவிற்கு தஞ்சை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். முதுநிலை தலைமை அதிகாரி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் ஓய்வு பெற்ற தபால்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் முதுநிலை தலைமை அதிகாரி பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் தபால்துறை மூலம் 1,000 ஏ.டி.எம். மையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கிளை அலுவலகங்களிலும் 1 லட்சத்து 30 ஆயிரம் மைக்ரோ ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை கோட்டத்தில் மன்னார்குடியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஏ.டி.எம். மையம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. தற்போது தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இது 20–வது ஏ.டி.எம். மையமாகும்.

சேவை விரிவுபடுத்தப்படும்
இந்த ஏ.டி.எம். மையம் மூலம் பொதுமக்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ஒருமுறைக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரையும், ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரமும் எடுக்கலாம். இந்த ஏ.டி.எம். மையம் மூலம் 15 ஆயிரத்து 475 வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். தபால் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களது மாத சம்பளத்தை ஏ.டி.எம். மையம் மூலம் எடுத்து கொள்ளலாம். இந்த ஏ.டி.எம். மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். விரைவில் 24 மணி நேரமும் செயல்படும். வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் இந்த ஏ.டி.எம். மையம் மூலம் பணம் எடுக்க முடியாது. ஆனால் விரைவில் அவர்களும் பணம் எடுக்கும் வகையில் இதன் சேவை விரிவுபடுத்தப்படும்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது