அதிரையர்களை அல்லல்பட வைக்கும் ஒரு சில செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள்.

மனிதர்களின் ஆசைகள், தேவைகள், பாவனைகள், மற்றும் உபயோகிக்கும் திறன் இவைகளுக்கு ஏற்ப இன்னும்  எத்தனை வந்தாலும்.......? அது போதாது என்றே மனித மனம் சொல்லும். காரணம் ஏக்கத்துக்கு எல்லை கிடையாது.

அதிரைக்கு ஆரம்பத்தில் அலைபேசியின் அலைவரிசையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது ஏர்செல் அலைவரிசையை சேரும்.

2004-ம் வருடம், ஏப்ரல் மாதம் 7-ம் தேதி புதன் கிழமை, அதிரைக்கு ஏர்செல், தங்களுடைய அலைவரிசையை ஆரம்பித்தார்கள். அது முதல் அதிரை மக்கள் ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

அதன் பின்பு, ஒவ்வொரு அலைவரிசையாக அதிரையில் நுழைந்து இன்று ஏராளமான அலைவரிசைகள் அதிரையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோபோன், ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது.

மேலும் சொல்லபோனால், அதிகமான வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இருப்பது ஏர்டெல் ஒன்றே....... தவிர வேறு எதுவும் இல்லை.

கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து........, ஒரு மாதத்திற்கு ஆயிரத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளை ஏர்டெல் அலைவரிசை நிர்வாகம் அதிரை நகரில் விற்று வருகின்றது. மற்றபடி டாக்டைம், டேட்டா பயன்பாடு இவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம். 

ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் என்னவோ ஏர்டெல்லின் சேவை நல்லாத்தான் இருந்தது, ஆனால் தற்போது வசூலிக்கும் கட்டணத்திற்கு சமமான சேவை இல்லை, இது பொதுமக்களின் குமுறல்.

அதிரையில் ஏர்டெல்லின் சேவை மிகவும் மோசமாக இருக்கின்றது, டவர் சேவை, டேட்டா சேவை, கஸ்டமர் சேவை, போன்ற அம்சங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றது, பல இடங்களில் டவர் கிடைப்பது மிக மிக மோசம்.

ஆனால், மூலைக்கு மூலை குடை போன்ற சிறிய பெட்டியைக் வைத்துக் கொண்டு கவர்ச்சியான ஆபர்களில் சிம் கார்டுகளை விற்க முயற்சிக்கும் இந்த ஏர்டெல் நிறுவனம், தங்கள் சேவையில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வதில்லை.

ஆனாலும், அதிரையில் உள்ள ஒவ்வொரு கஷ்டமரும் எர்டெல்லினால் தங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை இடைவிடாமல் புகார்களாக பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிரையர்கள் படும் அல்லல் கூடுமே தவிர ஒருபோதும் நிவர்த்தி ஆகாது.   

அதிரைக்கு செல்போன் சேவை வந்து "இன்று, 2016, ஏப்ரல் 3-ம் தேதியோடு 12-வது வருடம் முடிந்து 13-வது வருடத்தில் நுழைகிறது அதிரை நகரம் என்றால்...... அதுதான் உண்மை....K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது