முஸ்லீம் லீகின் நிர்வாக குழு கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்ப்பு !!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 03 தேதி மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் PS அப்துல் ஹமீது ஹாஜியார் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்    நடைபெற உள்ள சட்டமன்ற  தேர்தலை எவ்வாறு சந்திப்பது , மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு  பாடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அதன்படி  தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுகவுடன் கூட்டணி அமைத்து  5 இடங்களில் களம் காணுகிறது. 

இருப்பினும் தோழமை கட்சியான திமுக கூட்டணிக்கு மற்ற தொகுதிகளில் பாடுபட வேண்டும் என்ற தலைமையின் கட்டளைக்கு இணங்க அந்தந்த மாவட்ட நிர்வாகிள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் அதிரையில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுகோட்டை ,ஒரத்தநாடு,பேராவுரணி உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்களாக 
தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அல்ஹாஜ் PS அப்துல் ஹமீது ஹாஜியார், முஹம்மது பந்தர் ஹாஜி முகம்மது பாருக் ,தஞ்சை ரபிக்தீன்,வல்லம் பஷீர் அஹமது ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இதேபோல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக  தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் SM ஜெயினுல் ஆபிதீன் , விளார் பிரைமரி தலைவர் G பாஷா, Mஷேக் முகம்மது , சாதிக்பாட்ஷா உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக அதிரை நகர செயலாளர் Aமுனாஃப்,  மதுக்கூர் அப்துல் காதர், நகர தலைவர் KK ஹாஜா நஜ்முதீன்,  மாவட்ட இளைஞர் அணியை சேர்ந்த A ஷாகுல் ஹமீது , 
ஷேக் அப்துல்லாஹ், பட்டுகோட்டை நசுருதீன் ஆகியோர்ககளை நிர்வாகிகள் தேர்தெடுத்தனர். 

இதேபோல் பேராவுரணி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிகுழு பொறுப்பாளர்களாக மாவட்ட துணைத்தலைவர் செந்தலை நெய்னா முகம்மது,  ஆவணம் அப்துல் ரஜாக், அப்துல் லத்திப்,  அப்துல் கரீம் , பேராவுரணி ராஜாமுகம்மது ஆகியோர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.மேலும் இக்கூட்ட்த்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு திமுக கூட்டணியில் 5 இடங்களை பெற அதிக கவனம் எடுத்துக்கொண்ட மாநில தலைவர் காதர் முகைதீனுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

வழக்கறிஞர் முனாப் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் PS அப்துல் ஹமீது ஹாஜியார் , தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் SM ஜெயினுல் ஆபிதீன், உள்ளிட்ட தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தின் முடிவில் மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முஹம்மது இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது