குளங்களில் வற்றாத நீர் நிலை..அதிரை சேர்மன்.அஸ்லம் அவர்களின் இன்றியமையா பங்களிப்புநீரின்றி அமையாது உலகு ...! அந்நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் பாத்திரமாக விளங்குபவைகள் குளங்கள் ஆகும். அதிரை சேர்மன். அஸ்லம் அவர்கள்  கடந்த ஆண்டில் மேற்கொண்ட அயராத சேவையின்  காரணத்தினாலும், இறைவனின் அருள் கிருபையாலும் வருடம் கழிந்தும் இந்நாள் வரை  நமதூர் அனைத்து குளங்களிலும் நீர் வற்றாமல் நம் அனைவரின் அடிப்படை வாழ்வாதாரமாக விளங்கிக்கொண்டிருக்கின்றன. மாஷா அல்லாஹ். இறைவனுக்கு அடுத்த படியாக நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரித்தானவர் நம் சேர்மன் அஸ்லம் அவர்கள் என்பதை அதிரை மக்களால் மறுக்க இயலாது.

கடந்த ஆண்டை பற்றி எண்ணி பார்க்கும்பொழுது, குளங்கள் அனைத்தும் நீர் வற்றி நமதூர் வாலிப மற்றும் சிறுவர்கள் விளையாடும் மைதானமாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து குளங்களிலும் நீர் நிரம்பி வளம் கொழிக்கின்றது. இறைவன் கிருபையால் குளங்களில் நீர் வற்றாமல் வளம் கொழிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா.

அதிரை சேர்மன் அவர்களின் முன் முயற்சியாக,  நசுவுனி ஆற்றில் அதிக அளவில் தேங்கி கிடந்த நீரை பெரிய குழாய்கள் பொருத்தி வாய்கால் அமைத்து அதுவும் தாழ்வான நிலப்பரப்பான நசுவுனி ஆற்று படுகையிலிருந்து மேட்டு பகுதியான அதிரை நகருக்கு நீரை கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது சேர்மன் அவர்களுக்கு, அதையும் தன் அயராத உழைப்பால் அதிரை பேரூராட்சி மற்றும் தமிழ் நாடு அரசின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் துணையோடு வெற்றி கரமாக அதிரையின் அனைத்து குலங்களுக்கும் நீர் வரச்செய்தார். இந்த பதிவில் நாம் குறிப்பிட்டவைகள் மிகவும் குறைவே ஆனால் எழுத்துக்களால் சொல்லமுடியாத சிரமங்களுக்கிடையில் பணியை சிறப்பாக செய்து முடித்ததன் விளைவே இன்று நாம் சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்ட வேண்டும் என்ற இந்த பதிவாகும். வாழ்க அவர் ஆரோக்கியமும் சேவையும்.

குறிப்பு: அதிரை அஜ்மீர் ஸ்டோர் ஷாகுல் ஹமீது அவர்களின் கருத்துரையை பெற்று இங்கு தகவல் அளிப்பவர் : வாவன்னா- ச. முஹம்மத் இப்ராகிம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது