கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது



கிருஷ்ணகிரி மாவட்டம்.

கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி ராசு வீதியைச் சேர்ந்தவர் மோகன் (48). ஆட்டோ ஓட்டுநரான இவர், கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அங்குள்ள கோயில் அருகே அவர் குளிக்கச் சென்ற போது, அங்கு வந்த இளைஞர் கத்தியைக் காட்டி மிரட்டி மோகனிடமிருந்த பணத்தை பறிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் இளைஞரைப் பிடித்து அணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கிருஷ்ணகிரி முல்லை நகரைச் சேர்ந்த சிம்பு (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Pattukkottai Taluk.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது