பிற மொழிகளை அறியும்போது தமிழின் சிறப்பு நமக்கு தெரியும் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுபிற மொழிகளை அறியும்போது தமிழின் சிறப்பு நமக்கு தெரியும் என்று தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் பேசினார்.

சொற்பொழிவு
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலிக்கியப்பள்ளி சார்பில் டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
மொழிக்கும், தத்துவத்திற்கும் தொடர்பு உண்டு. மொழி என்பது சிந்தனையின் வெளிப்பாடு. எண்ணத்தின் வெளிப்பாடு. தத்துவம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு தான். தமிழ்த்தொண்டு என்பதும் புனிதமான ஒன்று. உண்மையான தமிழ்த்தொண்டானது தமிழ்மொழியினுடைய இலக்கிய வளத்தை மேம்படுத்துவதாகும். எல்லா மொழியும் சிந்தனையின் வெளிப்பாடாக இருந்தாலும் ஒரு மொழியின் சிறப்பு என்பது அந்த மொழி கொடுக்கின்ற இலக்கியத்தின் வழியாக வருகிறது. 

பிற மொழிகளை அறிந்து கொள்ளும்போது அதை ஒப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது தான் தமிழின் சிறப்பு நமக்கு தெரியவரும். இந்தியாவில் பல்கலைக்கழக நல்கைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 14 மொழி பல்கலைக்கழகங்கள் இருக் கின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை எல்லாம் ஆகஸ்டு மாதம் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அழைத்து ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி, மொழிகளுக்கு இடையே உள்ள சிறப்புகளை ஆய்வு மேற்கொள்ளும் வண்ணம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை ஒன்று அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக தத்துவ பேராசிரியர் ராஜேந்திரன், முனைவர் பட்ட ஆய்வாளர் பவானி ஆகியோர் பேசினர். முன்னதாக துறை தலைவர் சாவித்திரி வரவேற்றார். முடிவில் முனைவர் பட்ட ஆய்வாளர் துரை நன்றி கூறினார்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது