விருதுநகரில் தடுப்புசுவரை உடைத்து பாலத்தில் தொங்கிய லாரி
ரெயில்வே பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து லாரி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் பைபாஸ் சாலையில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஐதாராபாத்தில் இருந்து நோட்டு புத்தகம் ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி நோக்கி அந்த லாரி சென்றது. 

பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார் (வயது 39) லாரியை ஒட்டிச் சென்றார். இந்த லாரி, ரெயில்வே தண்டவாளத்தின் மேல் உள்ள பாலத்தில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி ஓடிய லாரி, பாலத்தின் தடுப்புசுவரை உடைத்தபடி நின்றது. லாரியின் ஒரு சக்கரம் பாலத்தின் வெளியே சென்றுவிட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக லாரி அந்தரத்தில் தொங்கியபடி நின்றுவிட்டது. கீழே விழுந்திருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும். 

இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது