ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இசை கேட்டால் கேட்கும் திறன் பாதிக்கும்


ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் செவித்திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இசையை அதிகமாகவும் பெரிய சத்தத்துடன் கேட்பதால் செவித்திறன் பாதிப்பதாகவும்,  1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் 12 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களில் 43 மில்லியன் பேர் கேட்கும் திறனை இழக்கும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கும் திறனை இழந்த வாலிபர்கள் 1994-ல் 3.4  சதவிகிதமானர்கள் இருந்தனர்.  2006- ல் கேட்டுகும் திறனை இழந்த வாலிபர்களின் விகிதம் 5.3 வீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடியோ பிளேயர்கள், இசைநிகழ்ச்சிகள் மற்றும் மதுபானசாலைகளில் ஏற்படுத்தப்படும் சத்தமும் தற்போது கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன. பணக்கார நாடுகள் மற்றும் நடுத்தர நாடுகளில் ஏராளமானோர் தனிப்பட்ட ஆடியோ சாதனங்களில் பாதுகாப்பற்ற அளவுகளில் சத்தத்தை கேட்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இசை கேட்கும் போது ஒரு மணி நேரத்திற்கு குறைவாக இசையை கேட்பதாலும், ஒலி அளவை குறைத்துக் கேட்பதாலும் செவிப்புலனுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது