மூங்கில் அரிசி கஞ்சிதேவையான பொருட்கள்:

மூங்கில் அரிசி – 150 கிராம்
நொய் அரிசி – 150 கிராம்,
சீரகம், ஓமம் தலா அரைத் தேக்கரண்டி,
பூண்டு – 6 பல்,
சுக்கு ஒரு துண்டு,
நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி,
உப்பு தேவைக்கு

செய்முறை:

* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.

* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.

* அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.

மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்

40 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு கோதுமை போல் இருக்கும். பின்னர் மூங்கில் பட்டுவிடும்.


தமிழகத்தில் கன்னியாகுமாரி, ஊட்டி, கூடலூர், பாபநாசம் போன்ற மலைப் பகுதிகளிலும், கேரளா, குஜராத் போன்ற பகுதிகளிலும் மூங்கில் அரிசி உணவு சிறப்பானது. 


மூங்கில் அரிசியின் பயன்கள் :

மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. 
உடல் வலிமை பெறும்.
சர்க்கரை அளவை குறைக்கும்.
எலும்பை உறுதியாக்கும்.
நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும். 

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது