அதிரையில் கந்தூரி ஊர்வலம்

அதிரையில் இரண்டு தர்காக்கள் உள்ளன. இவைகளில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இவ்வாண்டுக்கான காட்டுப்பள்ளி கந்தூரி விழா  தர்கா வளாகத்திலிருந்து ஊர்வலமாக கிளம்பிய  வண்ண ஊர்திகள் ஊரில் முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் தர்காவை வந்தடையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊர்வலத்தின் பொழுது இளைஞர்கள் ஆட கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறாக பல கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கந்தூரி விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் அதிரையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கந்தூரி ஊர்வலம் சரியாக 4:30 மணியளவில் காட்டு பள்ளி தர்காவில் இருந்து தக்வா பள்ளி மீன் மார்க்கெட் வழியாக சேது  ரோடு கடல் கரை தெரு மற்றும் ஆசாத் தெருவை அடைந்து மீண்டும் சரியாக 7:00 மணியளவில் தர்காவை அடைந்தது .இந்த ஊர்வலத்தில் வண்ண கூடுகளும் ,மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் கந்தூரி விழா அமைப்பாளர்கள் ஊர்வலத்தை அமைதியாக வழிநடத்தினர்.
Share:

4 comments:

 1. ஐயகோ... பரிதாபம்! இந்த (தேர்) திருவிழாவே (கந்தூரியே) நமதூருக்கு இறுதி திருவிழாவாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்..

  ReplyDelete
 2. யார் பிற மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்களோ , அவர்களும் அவர்களைப் போன்றோர்களே.
  அல் ஹதீஸ்.

  ReplyDelete
 3. யார் பிற மதக்கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்களோ , அவர்களும் அவர்களைப் போன்றோர்களே.
  அல் ஹதீஸ்.

  ReplyDelete
 4. உங்கள் வழி வேறு அவர்கள் வழி வேறு. அதனால் யாரையும் குறைகூறவேண்டாம். உங்கள் முன் தலைமுறையெல்லாம் அதனை தவறு என்று எண்ணியிருந்தால் இன்று நடந்திருக்காது. அதிரையில் மட்டுமல்ல இந்திய முழுவதும் நடக்கின்றது. எனவே அவர்கள் வழி வேறு, உங்கள் வழி வேறு. அதனால் அவர்களை குறைகூற வேண்டாம். ஊர் அமைதியே முக்கியம். வேண்டுமானால் நீங்கள் பிற மதம் என்றீர்களே அதுபோல் அவர்கள் வேறு மதம் நீங்கள் வேறு மதம் என்று அமைதிகொள்ளுங்கள். இதை எதிர்ப்பவர்கள் எல்லாவழியிலும் அவர்கள் செயல்பாடுகளோடு ஒத்துப்போவதில்லையே. எனவே நீங்கள் வேறு அவர்கள் வேறு.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது