தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை: ஸ்டாலின்தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தேமுதிக அதிருப்தியாளர்கள் நீக்கப்பட்டது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நானோ, திமுகவோ தலையிட விரும்பவில்லை.

வைகோ தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறார். அதற்காக நான் கவலைப்படவில்லை.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் 2 நாட்களில் இறுதி செய்யப்படும்'' என்றார் ஸ்டாலின்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது