பெற்ற குழந்தையை ஐ-போன் வாங்குவதற்காக விற்ற சீனத் தம்பதி!சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான ஐ-போன்வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டாலருக்கு (சுமார் ரூ.2.3 லட்சம்) விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
சீனாவின் ஃபியூஜி மாகாணத்தைச் சேர்ந்த ஆ துவான் என்பவர் பெரும்பாலும் இணையதள மையங்களிலேயே பொழுதைக் கழிப்பவர். அவருக்கு ஸியாவோ மேய் என்ற பெண்ணுடன் கடந்த 2013-ஆம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் திருமண வயதை எட்டாத நிலையில், ஸியாவோ மேய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சட்ட விரோதமாகப் பிறந்த அந்தக் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில், அதனை விற்பனை செய்துவிட ஸியாவோ மேயும், ஆ துவானும் முடிவு செய்துள்ளனர்.

குழந்தையை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஐ-போனும்’, மோட்டார் சைக்கிளும் வாங்க அவர்கள் முடிவு செய்தனர்.

அதையடுத்து சமூக வலைதளம் மூலம் 3,530 டாலருக்கு அந்தக் குழந்தையை ஆ துவான் விற்பனை செய்தார்.

இணைய தளம் மூலம் சட்ட விரோதமாகச் செய்யப்படும் விற்பனைகள் குறித்து விசாரித்து வரும் காவல்துறைப் பிரிவினர், இந்த விற்பனையைக் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆ துவானும், ஸியோவோ மேயும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆ துவானுக்கு 3 ஆண்டுகளும், ஸியோவோ மேய்க்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தது.

குழந்தையை வளர்க்கும் நிலையில் அவர்கள் இல்லாததால், குழந்தையை விலைக்கு வாங்கியவரிடமே அந்தக் குழந்தை தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

சீனாவில் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் கடத்தி, இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது