சில்லரை காசு...சீரியஸ் கேஸு.....நுகர்வோருக்கு


அன்றாட வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று சில்லரை காசுகளின் பற்றாக்குறை. வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க சிறு கடைகளிலிருந்து பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட்கள், பொது பேருந்துகளில் பயணம் செய்யும்போதும் பயண சீட்டு வாங்கியபிறகு பாக்கி சில்லறையை பேருந்து நடத்துநரிடமிருந்து பெறுவதும் அன்றாட வாழ்வின்  மிக பெரும் பாடுதான். கொஞ்சம் அசந்தா பொதுமக்களான நுகர்வோர்கள்  மண்டையில் மிளகா அரைக்கிற கதை தான்....அதாவது வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்து மீதமுள்ள சில்லறை பாக்கிகளை கடைகாரர்களிடமிருந்து பெறுவது போதும் போதும் என்றாகிவிடுகிறது நுகர்வோர்களுக்கு. அதாவது விற்பனை செய்பவர்கள் தங்களிடம் அன்றாட  வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமான சில்லறை காசுகளை வைத்திருக்காமல்  தனது  கையாலாகாத தனத்தை மக்களின் அதாவது வாடிக்கயாளர்களின் மீது மிளகாய் அரைக்கிறார்கள்.... என்னவென்றால் உதாரணமாக 5 ரூபாய் அல்லது அதற்கு குறைவான சில்லறைகளை கொடுப்பதில்லை...அல்லது நுகர்வோர்கள் விருப்பமின்றி அவர்களுக்கு தேவை இல்லாத சிறு மிட்டாய்கள் போன்றவற்றை கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இந்த சில்லறை விஷயம் ஒன்று அல்லது இரண்டு வாடிக்கயாலர்களோடு  நின்று விடுவதில்லை. மாறாக கடை அல்லது சூப்பர் மார்க்கெட் களுக்கு வரும் பெரும்பாலான நுகர்வோர் எதிர்கொள்கின்றனர். இது போன்று நூற்று கணக்கான கடைகளில் ஏற்படும் இந்த சில்லறை பிரச்சனையை கணக்கிட்டு பார்த்தால் ஒரு நாளில் ஒரு ஊரில் உள்ள பல வியாபார நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான சில்லறையை கணக்கின்றி லாபமாக பெறுகிறார்கள், அல்லது விற்காத சிறு சிறு பொருள்களை அல்லது மிட்டாய்களை நுகர்வோர் விருப்பமின்றி கொடுத்து காசாக்கி விடுகிறார்கள். அப்படியென்றால் ஒரு மாவட்டத்தில் இயங்கிகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கடைகளிலோ, சூப்பர் மார்க்கெட் களிலோ ஒரு நாளில் எத்தனை இலச்ச கணக்கான தொகை ஏமாற்ற படுகின்றன என்பதை சிந்தித்து பார்த்தால்...சில்லறை காசு சில்லறை விசயமல்ல சீரியஸ் கேசு என்பது புலப்படும். எனவே சிறிய பெட்டி கடையிலிருந்து பெரிய சூப்பர் மார்க்கெட் வரை விஜயம் செய்து பொருட்கள் கொள்முதல் செய்யும் அனைவரும் நுகர்வோர்களே...உங்களுக்கு தேவை விழிப்புணர்வு.

தகவல் : வாவன்னா - எஸ். முஹமது இப்ராகிம். அதிரை.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது