சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகம் வந்தடைந்தார் அசதுத்தீன் உவைசி!!


தமிழகத்தில் மே 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சில கட்சிகள் தங்களது முதற்கட்டப் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு அடுத்தடுத்துப் பணிகளில் ஆயுத்தமாகி வரும் நிலையில் (AIMIM) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் உவைசி இன்று தமிழகம் வந்தடைந்தார்.

முன்னதாக கிருஷ்ணகிரி நகரத்தில் தனது கட்சியின் புதிய அலுவலகத்தை  திறந்து வைத்து மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழகத்தில் கட்சியின் வரவேற்பு / வளர்ச்சி  பற்றி கேட்டறிந்தார். 

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருந்து  (AIMIM) கட்சி தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட உள்ளதைப் பற்றி இன்று வாணியம்பாடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்ற உள்ளார். 

இதற்கு முன்னதாக தமிழகம் வந்தடைந்த அசதுத்தீன் உவைசிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல், 
வாணியம்பாடியிலிருந்து AX சிறப்பு நிருபர் அகமது அஸ்லம் 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது