மது போதையின் தனயன்களே! தண்ணி அடிக்க உங்களுக்கு வேறு இடம் இல்லையா?


குடிமகன்களே, நீங்கள் மதுவை குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்தினால் கேட்கவா போகிறீர்கள்? ம்.....ஹூம், ஒருக்காலும் கேட்க மாட்டீர்கள், சரி அது உங்கள் இஷ்டம்.

அதே நேரத்தில், எந்த இடத்தில் இருந்து குடிக்கணும், எந்த இடத்தில் இருந்து குடிக்கக் கூடாது என்ற ஒரு வரையறை உண்டு, அது உங்களுக்கு தெரியுமா..?

அதிரையில் எத்தனையோ குளங்கள் இருக்குது, அதிலே சில குளங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சில பெருமைகள் உண்டு. அந்த வகையில் காட்டுக்குளமும் ஒன்று, இந்த காட்டுக் குளம் அதிரைக்கு குடிநீர் ஆதாரத்தை வழங்கி வருகின்றது, இது அதிரையர்கள் அனைவரும் அறிவார்கள்.

தற்போது இந்தக் குளம் நீரின்றி வற்றிப் போய் கிடக்கின்றது. அதாவது பொட்டலாக இருக்கின்றது, இதை பயன்படுத்தி, ஒரு சிலர் கூட்டமாக இரவு நேரங்களில் அதாவது மாலை ஏழு...... எட்டு மணிக்கு பிறகு வந்து  மதுவை அருந்துவதும், வசனங்கள் பல பேசுவதும் தினம் தினம் வாடிக்கையாகி விட்டது. இந்த இடம் கும் இருட்டாக இருப்பதினாலும், யாரும் கேட்காமல் இருப்பதினாலும் இவர்களின் அட்டூழியம் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் இந்தக் காட்டுக்குளம் ஒரு காலத்தில் காடுகள் சுற்றி சூழ இருந்தது, ஆனால் தற்போது அதே காட்டுக்குளம் பல வீடுகள் குடும்பங்களோடு சுற்றி சூழ இருக்கின்றது.

மது போதையின் தனயன்களே! குடிக்கும் இடத்தை மாற்றிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது. இதுக்கும் மீறி இந்த இடத்தை பயன்படுத்தினால்! இப்பகுதி குடும்பங்கள் திரண்டு வருவார்கள். பிறகு இப்ப இருக்கின்ற மரியாதையும் அப்போ இருக்காது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
Share:

3 comments:

 1. //மீறி இந்த இடத்தை பயன்படுத்தினால்! இப்பகுதி குடும்பங்கள் திரண்டு வருவார்கள். பிறகு இப்ப இருக்கின்ற மரியாதையும் அப்போ இருக்காது..!//

  Very soft warning. இந்தச் சமூக விரோதிகளுக்கு எதிராக, மார்க்கப் பற்றுள்ள இளைஞர் படை ஒன்று ஆயத்தமானால்தான், இவர்கள் திருந்துவார்கள்; அல்லது, அழிந்து நாசமாவார்கள்!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அந்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அவர்களின் அட்டுளீயங்களை அடக்க ஒவ்வொரு தொழுகையாளுகளின் பங்கும் இளைஞர்களுக்கும் உண்டு சமூக துரோகிகளை உடனே தட்டி அந்த இடத்திலிருந்து அப்புரபடுத்துங்கள்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது