யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து பயிற்சிதஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவாரூர், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இவற்றில் தஞ்சை சட்டசபை தொகுதியில் மட்டும் முதன்முறையாக வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் வைக்கப்பட உள்ளது.

1,350 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை சட்டசபை தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில் மட்டும் இந்த எந்திரம் வைக்கப்பட உள்ளது.

தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 327 எந்திரங்கள் முதல்கட்ட தர சோதனை முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்த எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதைப்போல தஞ்சை சட்டசபை தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளர்கள் மற்றும் தஞ்சை வட்டத்தில் பணி புரியும் சரக வருவாய் ஆய்வாளர்களுக்கு இந்த எந்திரத்தை பயன்படுத்தும் முறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து செயல்முறை பயிற்சியை திருச்சி பெல் நிறுவன பொறியாளர் ரவிரஞ்சன் அளித்தார்.

 K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது