அதிரையில் திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி! மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!அதிரை ஏ.ஜே.ஜும்மா பள்ளிவாசலில் இயங்கிவரும் "மக்தப் அல்ஹிதாயா"வின் முதலாமாண்டு நிறைவு விழாவாக மாணவர்கள் பங்குபெறும் "திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி" எதிர்வரும் 29.05.2016 அன்று காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை ஏ.ஜே.ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் ஓதும் மக்தப் மதரஸாவின் மூலம் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பள்ளி வகுப்பு மற்றும் வயதுவாரியாக 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்த போட்டிகளில் ஏதெனும் ஒரு பிரிவில் மட்டுமே மாணவர்கள் பங்குபெற முடிவும்.  ஒவ்வொரு பிரிவிலும் இறுதிபோட்டிக்கு தகுதிபெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதோடு போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுபொருட்களும் வழங்கப்படும் என போட்டி ஏற்ப்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் போட்டி தொடர்பான விபரங்களுக்கு மக்தப் அல்ஹிதாயா'வின் தீனியாத் ஆசிரியர் அவர்களை 98 94 34 8 321 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்புக்கொள்ளவும்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது