மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தமாக!


எதிர்வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி அரசியல்  கட்சிகள் பல்வேறு அமைப்புகளுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தன  அந்த வகையில் தமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து  போட்டியிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது இதனால் அதிர்ச்சியடைந்த தமாக நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி  வந்தது .

இந்நிலையில் இன்று மதியம் திடீரென மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த வாசன் மநகூ வில் இணைந்தார் . இதனை அடுத்து  தேமுதிக தலைமையகம் சென்ற வாசன் உள்ளிட்ட மநகூ தலைவர்கள்    தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் .

மநகூவில் இடம்பெற்றுள்ள வாசன் கட்சியினர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் 25முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக்கூடும் என தெரிகிறது. 

பட்டுகோட்டை தொகுதியில் ரங்கராஜன் மீண்டும் போட்டி ?

தற்பொழுது சிட்டிங் MlA வாக உள்ள NR ரெங்கராஜன் மீண்டும் பட்டுகோட்டை தொகுதியில் தென்னதோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன. 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது