அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்காக மொட்டை அடித்துக் கொண்ட மாணவர்கள்.
கீமோதெரபி செய்துகொண்டதால், தனது தலைமுடியை இழந்த மார்லி, தன் மொட்டை தலையைக் கண்டு தனது நண்பர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்வார்களோ என்ற கவலையுடன் பள்ளிக்குத் திரும்பினாள். ஆனால், அவர்களின் செயலோ, மார்லியை ஆச்ர்யத்தில் ஆழ்த்தியது. தனது நண்பர்களும், ஆசிரியர்களும் தன்னை கிண்டல் செய்யாமல், ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவர்களில் பலர் தன்னைப் போலவே தலையை மொட்டை அடிக்க முடிவு செய்ததைக் கண்ட மார்லியுடைய மகிழ்ச்சியின் முன், புற்றுநோய் தோற்றே விட்டது. அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் உள்ள ப்ரூம்ஃபீல்ட் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்லியின், இடது கால் பாதத்தில், சிறிய வீக்கத்தினை கண்ட மார்லியின் தாய், அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அது புற்றுநோய் என தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்குப் பின், கீமோதெரபி செய்து கொண்ட மார்லி, தனது தலைமுடியை இழந்தாள். மார்லியை ஊக்கப்படுத்தும் விதத்தில், புற்றுநொயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் அரசு சாரா நிறுவனமான செயின்ட் பால்ட்ரிக்ஸ் சார்பாக, தங்களின் தலை முடியை அளிக்க, மார்லியின் நண்பர்களும், ஆசிரியர்களும் முன் வந்தனர்.தலையை மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலமாகவும் குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டும் நிறுவனம் செயின்ட் பால்ட்ரிக்ஸ். இந்த நிறுவனத்தின் வாயிலாக, மார்லியுடன் பயிலும் 80 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மொட்டை அடித்துக் கொண்டு, 25000 டாலர் நிதியினை அளித்து உதவியுள்ளனர். "என்னை கிண்டல் செய்வார்கள் என எதிர்பார்த்த எனது நண்பர்கள், என்னை ஊக்கப்படுத்தி, இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறாள் மார்லி.குழந்தைகளிடம்தான் மனிதநேயம் அதிகமாக இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது