ஆம் ஆத்மி சார்பில் களம் காணுவாரா உமர் தம்பி ?


கடந்த நாடாளுமன்ற தேர்தலின்பொழுது ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட முடிவெடுத்த உமர்தம்பிக்கு சில காரங்களால் வாய்ப்பு நழுவிப்போனது , இதனை அடுத்து சுயேட்சையாக போட்டியிட இருந்த உமர்தம்பியை மேலிடம் தடுத்ததால் போட்டியிடும் முடிவுக்கு முடிவுரை எழுதினார் உமர்தம்பி. 

இந்நிலையில் பாரம்பரிய குடும்ப பின்னணியும் அரசியல் செல்வாக்கும் உள்ள உமர்தம்பியை மீண்டும் சட்டசபை தேர்தலில் களம் இறக்க ஆம் ஆத்மி வட்டாரங்கள் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. 

இது குறித்து உமர்தம்பியை தொடர்புகொண்ட நாம் செய்தியின் உண்மை தன்மை பற்றி கேட்டோம் அதற்க்கு பதில் அளித்த அவர் ஆம் ஆத்மி மேலிடம் விடாமல் என்னை வற்புறுத்தி வருவதகா கூறிய அவர் நல்ல சூழ்நிலையும் இறைவனின் கருணையும் இருந்தால் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவேன் என்றார், 

எது எப்படியோ நம்மூர் காரர் களம் கண்டால் கரம் கொடுப்பது நமது கடமை . 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது