திமுக கூட்டணியை விட்டு வெளியேறியது SDPI !

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமாக, SDPI  உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி நிலவரம் பற்றி முறையாக முடிவெடுக்க வில்லை. 

இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக SDPI கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு தெரவித்தனர் அப்பொழுது தங்களுக்கு சாதகமாக உள்ள சில தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவுக்கு SDPI கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் மமக ,முஸ்லீம் லீக்கிற்கு  தலா 5தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது . இதனை அடுத்து SDPI கட்சியினருக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து திமுக தலைமை மொளனம் காத்து வந்தநிலையில் இன்று மாலை திமுக கூட்டணியை விட்டு  வெளியேறியதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து SDPI  நிர்வாகிகளை தொடர்புகொண்டபொழுது     இன்னும் ஓரிரு நாட்களில் நாங்கள் தனித்து போட்டியிடும் தொகுதிகள் வெளியாகும் என்றார்.
Share:

1 comment:

  1. எஸ்டிபிஐ கட்சியின் கொடியை மட்டும் போடவும்......

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது