நேரடியாக மோத போகும் ஷேய்க் தாவூது vs காதர் முகைதீன்


IUML and TMML to lock horns in Kadayanallurதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியும் கடையநல்லூர் தொகுதியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. இக்கட்சிக்கு திமுக 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அந்தத் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. 

அதன்படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முக்கியமான வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு அதிமுக ஒரே ஒரு சீட் மட்டும் கொடுத்துள்ளது. கடையநல்லூரில் அக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூது போட்டியிடுகிறார். அதுவும் இரட்டை இலைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். இந்த ஒரு தொகுதியில் மட்டுமே இரு முஸ்லீம் லீக் கட்சிகளும் நேருக்கு நேர் மோதலில் உள்ளன.


Share:

5 comments:

 1. நாகப்பட்டினம் தொகுதியில் ம.ஜ.ம.க.விற்கு எதிராக யார்?

  ReplyDelete
 2. நாகப்பட்டினம் தொகுதியில் ம.ஜ.ம.க.விற்கு எதிராக யார்?

  ReplyDelete
 3. நாகப்பட்டினம் தொகுதியில் ம.ஜ.ம.க.விற்கு எதிராக யார்?

  ReplyDelete
 4. மோதுவதில் (நமக்குல்) முதல் இடம் நம்மவர்களுக்குத்தான்!

  ReplyDelete
 5. மோதுவதில் (நமக்குல்) முதல் இடம் நம்மவர்களுக்குத்தான்!

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது