நாகையில் மமக vs மஜக கடும் போட்டி


MJK Thameem Ansari contest oddanchatram constituencyஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஹாரூன் ரசீத்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நாகப்பட்டினத்திலும் போட்டியிடும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அந்த தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் ஹாரூன் ரசீத்தும் நாகப்பட்டினத்தில் தமிமுன் அன்சாரியும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியும் நாகை தொகுதியில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து வந்ததுதான் மனிதநேய ஜனநாயகக் கட்சி. அதனால் அந்த தொகுதியில் இரண்டு முஸ்லீம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

2 comments:

 1. சபாஷ் சரியான போட்டி

  ReplyDelete
 2. ஓட்டை” பிரித்தீர் ஒதுங்கிய கள்வர்
  நாட்டைப் பிடிக்க நலமுடன் திட்டம்
  ”கண்ணியம்” பெயரைக் கொண்டே பரப்புரை
  புண்ணியம் வருமா போகும் வழியினில்
  எண்ணிப் பார்க்கா இந்தக் கூட்டம்
  கண்ணை விற்றுக் காட்டும் வேடம்
  பத்தும் நமக்குப் பல்லாண்டு கழித்துக்
  கொத்தாய்க் கிடைக்கக் கோதாவில் பிளவு?

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது