சவூதி அரேபியாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உதயமாகிறது இஸ்லாமிய வங்கி...!
சவூதி அரேபியாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உதயமாகிறது வட்டியில்லா இஸ்லாமிய வங்கி.....!!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய வங்கி ISLAMIC DEVELOPMENT BANK (IDB) தனது கிளையை இந்தியா முழுவதும் தொடங்க இருக்கிறது.
முதல் கிளையை குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் துவங்க உள்ளது.
இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது.
இந்த வங்கி முழுக்க முழுக்க இஸ்லாமிய முறைப்படி வட்டியின்றி செயல்படும்.
வைப்பு நிதிகளுக்கும் வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும். இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.
சவூதிஅரேபியாவில் இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது. இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.
நன்றி : சுவனப்பிரியன் நஜீர் அஹமது
Share:

ஆலடிக்குளத்தில் புரண்டது ஜேசிபி (bulldozer)

அதிராம்பட்டினம் ஆலடிக்குளம் கரையில் நிறுத்துவதற்க்காக வந்த ஜேசிபி வாகனம் மண் சறுக்கி தலை கீழ்  புரண்டு கவிழ்ந்தது அதில் இருந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார்Share:

இறுதி ஆட்டத்தில் இருந்து விலகிய அதிரை AFFA அணி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடந்த கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி இறுதி ஆட்டத்தில் முன்னேறி விளையாடியது.இப்போட்டியில்  வேளாங்குடி அணியின்  கோல் கீப்பரின் தவறான அணுகுமுறையால் நடுவர்களால் ரெட் கார்ட் வழங்கப்பட்டது.இந்நிலையில் கால்பந்து விதிமுறையின் படி கோல் பகுதியில் பௌல் ஏற்பட்டால் பெனால்டி ஷர்ட்  கொடுப்பது வழக்கம்.அதனை இப்போட்டியில் நடுவர்கள் வழங்காமல் ஒரு சார்ந்த அணிக்கு ஆதரவாக செயல்பட்டதை அடுத்து அதிரை AFFA  அணி இறுதி ஆட்டத்தில் இருந்து விலகி இரண்டாவது பரிசை பெற்றது.  
Share:

கலைஞர் TV விவாத நிகழ்ச்சியில் பேசிய அதிரை சாலிஹ்! (வீடியோ இணைப்பு)சில தினங்களுக்கு முன் கலைஞர் தொலைக்காட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே விவாத நிகழ்ச்சியில் அதிரை சாலிஹ் கலந்துகொண்டு மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் தனது கருத்தினை பதிவு செய்தார். இதனை கடந்த 14.05.2016 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி இவரை போன்று நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் இறுதியாக பேசிய முகம்மது சாலிஹ் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணம் வசூல் செய்யும் கல்வி நிறுவனங்கள் குறித்து எளிதில் புகார் செய்யும் வண்ணம் தனியாக கண்காணிப்பு மையம் அமைத்து இலவச தொலைபேசி எண்ணை அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் வீடியோ பதிவு உங்கள் பார்வைக்கு.
Share:

பள்ளிக்கல்வி துறையின் அதிரடி அறிவிப்புகள் - பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு ...!
வரும் ஜூன் மாதம் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில்,  பள்ளி கல்வி துறையின் மாணவ மாணவிகளுக்கான நடை முறை அறிவுரைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதோ கீழே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்கள் சில:-

மாணவர்கள் பைக்குகளில் (இரு சக்கர வாகனங்கள்) பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.

செல் போன் எடுத்து வர கூடாது.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளுக்கு முரணாக நடக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை. செல்போன் எடுத்து வந்தால், அதை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்து அறிவுறுத்தல் மூலம் திருப்பி கொடுக்கப்படும். விதிமுறைகளை மீறும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதால் தவறான நடைமுறைகள், வரம்பு மீறும் செயல்கள் தடுக்கப்படும்.

பள்ளி கல்வி துறையின் இந்த அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் அனைவராலும் மிகுந்த வரவேற்பு அளிக்கபடுகிறது. வீட்டுக்கு அடங்காத மாணவர்களின் செயல்களால் இன்னல் அடைந்த பெற்றோர்கள், இந்த அறிவிப்பால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர் என்பதே அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
மேலும், மாணவர்களின் கல்வி திறன் மற்றும் ஒழுக்கம் மேம்படும் என்பது உறுதி. பெரும்பாலான வாகன விபத்துகள் நடக்காமல் இருக்க இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த பதிவின் மூலம், பள்ளி கல்வித்துறைக்கு பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கபடுகிறது.
Share:

அதிரை அணி இறுதி போட்டிக்கு தகுதி!


இளையாங்குடியில் நடைபெற்று வரும் கால்பந்து தொடர்போட்டியில் வெற்றிகள் பெற்று அதிரை AFFA அணி நாளை நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இப்போட்டியில் AFFA அணி வெற்றிபெற்றால் முதல் பரிசு தொகையான ரூ. 50,000 பெறமுடிவும் இல்லாவிட்டால் இரண்டாம் பரிசான ரூ. 25,000 மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Share:

பேச்சு கவிதை! ஹாஜா நஜ்முதீன்!


பேசிப்பார் அன்பு வரும்
பேசிப்பார் அழுகை வரும்
பேசாதே உறவு தொடரும்
பேசாதே பிரிவும் படரும்
வார்த்தை வலிமையான ஆயுதம்
மெளனம் உயிரறுக்கும் விஷம்.
-ஹாஜா நஜ்முதீன்
Share:

போர் வசதியுடன் கூடிய வீட்டுமனை விற்பனைக்கு!


அதிரை நடுவிக்காடு முனாஃப் மனை அருகே போர் வசதியுடன் கூடிய (65X35) வீட்டுமனை ஒன்று விற்பனைக்குள்ளது. மேலதிக தகவல்களுக்கு 9629648802 என்ற தொலைபேசி எண்ணை  தொடர்புகொள்ளவும்.Share:

அதிரை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வந்த எம்.எல்.ஏ!நடைப்பெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோகவெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. இதில் திமுக கூட்டணியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டு வந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியினை அதிகப்படியான வாக்குகள் விதியாசத்தில் இம்முறை அதிமுக தனித்து நின்று வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் வெற்றிப்பெற ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று அதிமுக தலைமையின் வழிகாட்டலின் படி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்கள் அதிரை வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்து ஊரில் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்பொழுது அதிமுகவின் நகர செயலாளர் திரு.பிச்சை, நகர துணை செயலாளர் தமீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Share:

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது விழா அழைப்பு


அன்பிற்கினியவர்களே !
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ-மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு பரிசுகள் - பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா எதிர்வரும் 03-06-2016 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Share:

அதிரையில் சிறப்பாக நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு...

கடற்கரை தெரு ஜமாஅத் மற்றும்  அமீரக அமைப்பின் சார்பில் 5ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு நேற்று கடற்கரை தெரு பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஹாஜி அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமை வகித்து மக்ரிப் தொழுகைக்கு பின் முதல் அமர்வு துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்னை கதிஜா கல்லூரி தாளாளர் பேரா.சகிதா பானு MA.B.ed அவர்கள் 'பயனுள்ள கல்வி' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். இதில்  பெண்கள்  தான் ஒரு சமுதாயத்தையே அறிவுள்ள சமுதாயமாக மாற்றும் திறன்பெற்றவள் என பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

இதையடுத்து இரண்டாவது அமர்வு இஷா தொழுகைக்கு பின் தொடங்கியது. இதில் மற்றொரு சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அரசியல் விமர்ச்சகர் ஊடகலாவியர் சகோதரர் ஆளூர் ஷாநாவாஸ் 'ஆசைப்படுங்கள்' என்ற தலைப்பில் நாம் எதற்கு ஆசைப்பட வேண்டும். எப்படியும் வாழலாம் அனால் இப்படித்தான் வாழவேண்டும் என இஸ்லாம் வகுத்திருக்க நாம் இஸ்லாத்தையும் சமுகத்திற்கு பயனளிக்கும் வகையில் நமது ஆசைகள் இருக்க வேண்டும் என சிறப்பான உரை நிகழ்த்தினார்.

இதில் அதிரை பேரூர் மன்ற தலைவர் S.H .அஸ்லம் முன்னிலை வகித்தார். இதில் கடற்கரை தெரு வாசிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் பதிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை அளவில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டன.


Share:

அதிரையில் இன்று கல்வி விழிப்புணர்வு மாநாடு

அதிரையில் 5 ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிகிழமை 27-05-2016 மக்ரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பாக நடைபெறும்.

இடம்: கடற்கரைத்தெரு பள்ளிவாசல் அருகில்

சிறப்புரை:
 சகோ ஆளூர் ஷா நாவஸ் (ஊடகவியலாளா்)

பேரா. சகீதா பானு MA,B.Ed.


அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
கடற்கரைத்தெரு ஜமாத் மற்றும் அமீரக அமைப்பு.Share:

அதிரையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

அதிரை  சி.எம்.பி லைன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு  உள்ள அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 30-05-2016 அன்று திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுகொள்கிறோம். 


Share:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கான புதிய மின் கட்டணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்குக்  கட்டணம் கிடையாதுஎன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Share:

அதிரையர்களுக்கு அவசர வேண்டுகோள்! (அதிகம் பகிரவும்)


தற்பொழுது பல ஆண்டுகளாக தெருக்களில் அள்ளப்படாமல் இருந்த குப்பையை அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் கொட்டியதற்காக எங்களை கைது செய்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க வேண்டுமாய் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.  

-ஜெ.முகம்மது சாலிஹ்,
செல்:9500293649

என்னுடன் A.முகம்மது இஸ்மாயில், M.I.முகம்மது முக்தார், A.K.சுஹைல் உள்ளனர். இன்று நாம் குரல்கொடுக்க தவறினால் நமது உரிமைகளை இழக்க நேரிடும்.
Share:

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டத்தில் கலந்து கொண்ட நால்வர்கைது!அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது மரைக்கா குளத்து மேடு பகுதியாகும் இப்பகுதி 20வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும் இப்பகுதியில் கடந்த இரண்டுஆண்டாக குப்பைகளை பேரூர் நிர்வாகத்தினர் அள்ளுவதில்லை 

இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர் இந்நிலையில் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத பேரூர் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சார்ந்த பலர் இன்று பேரூர் அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட Z முஹம்மது சாலிஹ், அதிரை இஸ்மாயில் , முக்தார், சுஹைல், ஆகிய்வர்களை போலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட நால்வர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது 


Share:

உறுமிக்கொண்டு செல்லும் பைக்குகள்)...மக்களின் மனதில் பதற்றம், மன அதிர்வு மற்றும் ஆரோக்கிய கேடுமனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று போக்குவரத்து, ஆனால் அதற்கு  தேவை பாதுகாப்பான வாகனங்கள் (கார், வேன்) மற்றும் இரு சக்கர வாகனங்கள். நமது அன்றாட மற்றும் அலுவல் தேவையான வேலைகளை மேற்கொள்ளும் நாம் முன்பே திட்டமிட்டு இரு சக்கர வாகனங்களிலோ அல்லது மற்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன் படுத்துகிறோம்.

ஆனால், நம்முடைய உயிர்களுக்கே ஊரு விளைவிக்கும் வகையில் சில இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சிறார்கள் தாம் வைத்திருக்கும் பைக்குகளில் சைலேன்செர் என்ற பகுதியில் தாமாகவே ஆள்டேரசன் செய்து அசாதாரண சத்தம், மக்கள் அதிர்ந்து வீழும் அளவுக்கு இடி இடிப்பது போன்ற சத்தம் வரவழைத்து அநாகரிகமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.  இதனால் பாதிக்கபடுவது ஏதுமறியாத அப்பாவி பொது மக்கள், பச்சிளம் குழந்தைகள். மேலும் இரவு நேரங்களில் திடீரென்று வரும் இது போன்ற பைக்குகளின் சத்தம் கேட்டு அதிர்ந்து பெரியவர்களில் இருந்து குழந்தைகள் தூக்கம் கெடுவதோடு மட்டுமில்லாமல், அதிர்ச்சியின் காரணத்தால் நோய்க்கு ஆளாக பட்டு துன்பம் அடைகின்றனர், ஏன் உயிரிழப்பு சம்பவம் கூட நடக்கும் அளவுக்கு நிலைமை செல்கிறது.

ஆகவே, இது சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அல்லது பொது சேவை நிறுவனங்கள் தலையிட்டு இது போன்ற பைக்குள் தவறாக பயன்படுத்தப்பட்டு, மக்களின் அமைதியான சுகாதார வாழ்வுக்கு அச்சுறுத்தலாக  இருக்கின்றதை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கொள்ளப்படுகிறது.

இதை சாதாரண விசயமாக கருதாமல், மக்களின் அமைதியான ஆரோக்கிய வாழ்வுக்கு துணை புரியும் வகையில் செயல்படுவோம்.

மக்களின் பொது நலன் கருதி, இப்பதிவு மீண்டும்  பதிவிடப்படுகிறது, அரசு போக்குவரத்து துறை மற்றும் காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மோட்டார் வாகனங்களை வேண்டுமென்றே தவறாக பயன்படுதுபுவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நன் நோக்கத்தில்.

Share:

அதிரையில் SSLC தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 94% தேர்ச்சி!
இன்று தமிழகம் முழுவதும் SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதிரையில் தேர்வு எழுதிய மாணவ/மாணவிகளில் மொத்தம் 94% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுசாதனை நிகழ்த்தியுள்ளனர். மேலும் இது அடுத்த கல்வியாண்டில் 100% தேர்ச்சி என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Share:

அதிரை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் முதல் மூன்று இடங்கள்...


மாணவர் பெயர் / த/பெ மதிப்பெண்
வீரமணி , ஹரிஹரன் 440
அப்துல் ஹமீது 432
திருமாயவன் 429

மாணவி பெயர் / த/பெ மதிப்பெண்
அப்ரின் பாரிஸா A , அஸ்மா A 484
ஆஷிகா S 478
பெமினா J 472
Share:

அதிரை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி முதல் மூன்று இடங்கள்


மாணவர் பெயர் / த/பெ மதிப்பெண்
சுரேகா k 474
சுபஸ்ரீ G, சினேகா B , விஜிகா N 463
மோனிகா G, அஜீதா B 462
Share:

சாதனை நிகழ்த்திய அதிரை இரட்டைச் சகோதரர்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

முஹம்மது சலீம் (தந்தை )
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முஹம்மது சலீம் அவர்களின் மகன்கள் சுஹைல் அஹமது பள்ளியளவில் 481/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், அதே போல் மற்றொரு மகன் முஹம்மத் சஹ்ல் 477/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இருவரும் உடன் பிறந்த இரட்டை சகோதரர்கள்.


 தனது மகன்கள் வெற்றி குறித்து 3 M நிறுவன உரிமையாளர் முஹம்மது சலீம் நம்மிடம் கூறுகையில்...
அல்ஹம்துலில்லாஹ் என மகன்கள் இமாம் ஷாபி பள்ளியில் பயின்று இந்த அளவுக்கு மார்க்குகள் பெற்று இருப்பதற்கு முதலில் வல்லா ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அடுத்து, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மற்றும் உடன் பயின்ற அவர்களுடைய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கே ஒரு சில விஷயங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என பிள்ளைகள் இந்த அளவுக்கு மார்க் பெற முக்கிய காரணங்களில் சில:

  •     தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.
  •   என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)
  •   எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.
  •  இவர்கள் இருவரும் படித்துக்கொண்டே திருக்குர்ஆணை மனனம் (ஹாபிழ்)செய்து வருகின்றனர் .
  •      இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.
  •     நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை  நாங்களும் கண்காணித்து வந்தோம்.
  •       எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப்பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.
  • மேற்கண்ட காரணங்களால் எனது மகன்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். என்றார்.

முஹம்மது சுஹைல் (481/500)
முஹம்மது சஹ்ல் (477/500)
தகவல்: பரீத் 

நன்றி:  அதிரை நியூஸ்
Share:

இமாம் ஷாஃபி பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள்

மாணவர் பெயர் / த/பெ மதிப்பெண்
அஹமது தஸ்லீம் 483
சுஹைல் 481
சஹ்ல் 477

மாணவி பெயர் / த/பெ மதிப்பெண்
கதிஜா 482
நுசைபா A 470
ஜுஹி பாத்திமா 469
Share:

இமாம் ஷாஃபி பள்ளியில் 95% தேர்ச்சி!SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது இதில் இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியில் ஆண்கள் 51 மற்றும் பெண்கள் 31 பேர் என மொத்தம் தேர்வு எழுதிய 85 பேரில் 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95% தேர்ச்சியாகும்.
Share:

SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள்!

பள்ளியின் பெயர் மாணவர் பெயர் / த/பெ மதிப்பெண்
காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அப்ரின் பாரிஸா A , அஸ்மா A 484
இமாம் ஷாபி ஆண்கள் பள்ளி அஹமது தஸ்லீம் 483
இமாம் ஷாபி பெண்கள் பள்ளி கதிஜா 482
Share:

அதிரை அரசு பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை!


SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது இதில் அதிரை அரசு (No.1) பள்ளியில் மொத்தம் தேர்வு எழுதிய 102 பேரில் அனைவருமே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது 100% தேர்ச்சியாகும். இபோல் கடந்த கல்வியாண்டில் தேர்வு எழுதிய 98% மாணவிகள் தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Share:

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 98%!SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது இதில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் தேர்வு எழுதிய 189 பேரில் 186 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98% தேர்ச்சியாகும்.
Share:

காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் 82% பேர் தேர்ச்சி!SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் தேர்வு எழுதிய 216 பேரில் 177 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 82% தேர்ச்சியாகும்.
Share:

இன்னும் சில மணித்துளிகளில் அதிரை மாணவர்களின் SSLC முடிவுகள்


ஆண்டுதோறும் வெளியாக கூடிய பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாவட்ட மாநில அளவில் சாதனை படைக்கும் அதிரை மாணவ மாணவிகளின் விபரங்களை நமது அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டு வருகின்றது. கடந்த வாரம் வெளிவந்த பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் அமோக வரவேற்ப்பை பெற்றது. அதேபோல் இன்று காலை வெளியாக உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பதிய நமது நிருபர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

உடனுக்குடன் தேர்வுமுடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்துடன்...

Share:

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு முறை நீக்கம்...சிறந்த முன்னோட்டம்..!!!
நீதிமன்ற தீர்ப்பின்படி மருத்துவ படிப்பிற்கான நேர்முக நுழைவு தேர்வு முறை நீக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.  இந்த செய்தி நம் நாட்டின் மக்களாட்சிக்கு உகந்த  ஒன்று ஆகும். சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து வர்கத்தினருக்கும் கல்வியினால் மேன்மை பெறவும், முன்னேற்றமான வாழ்வுக்கு முட்டுகட்டையாக இருந்த மருத்துவ கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு நீக்கப்பட்டது எல்லா நலனையும் கொடுக்கும். மருத்துவ படிப்பு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே என்று இருந்த  அவல நிலைமை மாறி, திறமையும் தகுதியும் உள்ள எல்லா தரப்பு மக்களும் மருத்துவப்படிப்பில் சேர்ந்து அவர்களின்  திறமையால் ஜொலிக்க முடியும்.  மேலும்  மக்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் பொது நலம் உள்ள பல நல்ல உள்ளங்களின் குடும்பத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகள் சிறப்பாக செயலாற்றி நம் நாட்டை நோய்களின் கொடிய தாக்கத்திலிருந்து மீட்டெடுப்பார்கள் என்பது திண்ணம்.

இதை முன்னோட்டமாக கொண்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்குவதில் பின்பற்றும் மிகவும் கடினமான நடை முறைகளை அகற்றுவதற்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் எண்ணிலடங்கா அனுபவ மற்றும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை கிடைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் நாட்டில் வறுமை குறைந்து உலகுக்கே சிறந்த நாடாக நமது இந்திய நாடு விளங்கும்.  பரவலாக அறியப்படுகின்ற வேலையின்றி தவிக்கும் நடுத்தர மக்களாகட்டும், படித்து முடித்த இளைஞர்களாகட்டும் அவர்களின்  வேலை கிடைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் நாட்டில் வறுமை குறைந்து உலகுக்கே சிறந்த நாடாக நமது இந்திய நாடு விளங்கும்.  பரவலாக அறியப்படுகின்ற வேலையின்றி தவிக்கும் நடுத்தர மக்களாகட்டும், படித்து முடித்த இளைஞர்களாகட்டும் அவர்களின் வேலையின்மைக்கு காரணம்  கார்ப்பரேட் நிறுவனங்கள்  பின்பற்றும் அனாவசிய  நடைமுறைகள்  இண்டெர்வியூ  என்ற  பெயரில்  பின்பற்றுவதாகும். இதனால் தகுதி மிக்க ஆற்றல் வாய்ந்த படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்க்கையில் பாதிப்புக்குள்ளகின்றனர். எனவே மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள மத்திய மாநில அரசுகள் பெரும்பான்மையான நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள அனாவசிய தேர்வு முறைகளை அகற்றி வேலை வாய்ப்பில் அனைவருக்கும் பயன் பெறும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்நாட்டு மக்களின் அவா. தூய எண்ணத்தோடு நன்மை பயக்கும் படி இந்த கருத்தை நான் இங்கு வெளியிடுகிறேன். இந்த பதிவை படிக்கும் அனைவர்களிடமும் இருந்து தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கின்றேன்.
Share: