Tuesday, May 17, 2016

அதிரையில் கனவாக மட்டுமே இருக்கும் 100% தேர்ச்சி!



தமிழகம் முழுவதும் இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதிரையினை பொறுத்தவரையில் ஹஃபிலா என்ற மாணவி 1134 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இந்நிலையில் அதிரையில் இவ்வாண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 92% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பின்னடைவாக மட்டுமே கருதப்படுகிறது.

ஏனெனில் 2013ஆம் ஆண்டுக்கு பிறகு அதிரையில் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் தொடர்ச்சியாக சரிந்தே  வந்துள்ளது அப்பொழுது வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிகளில் அதிரையில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 94.75% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான தேர்வு முடிவுகளில் 100% தேர்ச்சி என்ற இலக்கினை எட்டுவதற்கு பதிலாக தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்தே வருகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது