Thursday, May 19, 2016

அதிமு 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலை!


தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 42 சதவீத வாக்குகளுடன் அதிமுக முன்னிலை வகித்துள்ளது.
திமுக 29.8 சதவீதம், பா.ம.க. 6.2 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 6.8 சதவீதமும் மதிமுக 0.6 சதவீதமும் தேமுதிக 2.1 பா.ஜ.க 2.1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
இதில், பெரும்பான்மை இடங்களில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
232 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மை இடங்களான 122 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இதனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது. 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது