Monday, May 16, 2016

அதிரையில் 50% வாக்குபதிவு (2 மணிவரை)



தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியது. அதிரையில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் காலையில் வாக்குபதிவு மந்தமாகவே இருந்தது காலை 12 மணி வரை வெறும் 20% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்நிலையில் சற்று மழை  பெய்வது நின்று தூறல் மட்டுமே பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பகல் 2 மணி நிலவரப்படி 50% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் கூறுகையில் அதிரையில் இது வரை அமைதியான முறையிலே வாக்குபதிவு நடந்து வருவதாகவும்  100% வாக்குபதிவு அமைதியாக நடக்க தொடர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது