Friday, May 13, 2016

6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை!

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை (14 ம் தேதி ) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதற்கு மேல் பிரசாரத்தில் யாரும் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்து 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தமிழக தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் பேச தடை. 16ம் தேதி வரை மின் தடை செய்யக்கூடாது. நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பணம் பட்டுவாடா குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தேர்தல் அதிகாரி லக்கானி கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது