Monday, May 23, 2016

அதிரை AFFA பரிசளிப்பு விழா!


அதிரை கரிசல்மணி மைதானத்தில் AFFA சார்பில் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்தது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தலைசிறந்த அணிகள் பங்குபெற்று விளையாடினர். இதில் இறுதி போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் கலைவாணர் 7's கண்டனூர் மற்றும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் களம் கண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் யாரும் கோல் போடாத காரணத்தால் டிரைபிரேக்கர் முறையில் கலைவாணர் 7's கண்டனூர் அணியினர் வெற்றி கோப்பையினை தட்டி சென்றனர்.

இவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது