Wednesday, May 18, 2016

சென்னைவாசிகளை மீண்டும் மிரட்டும் மழை


அக்னி வெயிலுக்கு அனலாய் தகித்த சென்னை கடந்த இரு தினங்களாக உதகை, கொடைக்கானல் கிளைமேட்டுக்கு மாறிவிட்டது. மே மாதத்தில் ஜில்லென்று மழை பெய்வது நன்றாக இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அடைமழையைப் பார்த்தாலே அச்சம் எழாமல் இல்லை. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் சோக வடுவே சென்னைவாசிகளுக்கு இன்னமும் மறையவில்லை அதற்குள் மே மாத கோடை மழை விடிய விடிய பெய்து மிரட்டி வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சராசரியாக 180 மி.மீட்டருக்கும் மேலாக மழை அளவு பதிவாகியுள்ளது. புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் மட்டும் கடந்த இரு தினங்களில் 222 மி.மீ அளவிற்கு மழை அளவு பதிவாகியுள்ளது. இரவு முதல் கொட்டி தீர்த்த மழை சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பெய்து வருகிறது. தெளிய விட்டு தெளிய விட்டு மழை பெய்தால் நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது