Monday, May 16, 2016

என்ன நிகழ்ந்தாலும் சரி.. நம்பிக்கை ஏற்படுத்துங்கள்!!

நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளிவர உள்ளன.

மதிப்பெண் குறைந்து போனாலும்
ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெற
இயலாமல் போனாலும் உங்கள்
பிள்ளைகளை திட்டாதீர்கள்

மதிப்பெண்களை வைத்து தமது
பிள்ளைகளின் திறனை எடை போடுவது
போன்ற முட்டாள்தனம்  வேறில்லை

குழந்தைகள் அல்லாஹ்வின் அமானிதங்கள்
எந்த உயிரினத்தையும் அல்லாஹ் வீணாக
படைக்கவில்லை. தக்க காரணத்துக்காக
பல விதமான ஆற்றலோடு படைத்துள்ளான்

இந்த பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக
படைக்கப்பட்டுள்ள நமது பிள்ளைகளை
(மனிதர்களை)..........

பொருளாதார வெறி ஏற்றப்பட்ட
பந்தைய குதிரைகளை உருவாக்கும்
இன்றைய முதலாளித்துவ கல்வி முறையில்
வழங்கப்படும் மதிப்பெண்களை வைத்து
அவர்களின் திறனை எடை போடுவது
போன்ற மிக கேவலமான  செயல்
வேறில்லை

நம்பிக்கை ஏற்படுத்துங்கள்
என்ன நிகழ்ந்தாலும் சரி....

அந்த நம்பிக்கை தான் நாளைய
சாதனையாளர்களாக உங்கள்
பிள்ளைகளை உருவாக்கும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது