Thursday, May 26, 2016

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டத்தில் கலந்து கொண்ட நால்வர்கைது!



அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது மரைக்கா குளத்து மேடு பகுதியாகும் இப்பகுதி 20வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும் இப்பகுதியில் கடந்த இரண்டுஆண்டாக குப்பைகளை பேரூர் நிர்வாகத்தினர் அள்ளுவதில்லை 

இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர் இந்நிலையில் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத பேரூர் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சார்ந்த பலர் இன்று பேரூர் அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட Z முஹம்மது சாலிஹ், அதிரை இஸ்மாயில் , முக்தார், சுஹைல், ஆகிய்வர்களை போலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட நால்வர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது 


1 comment:

  1. இந்த செயலை செய்த நால்வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது