Saturday, May 28, 2016

அதிரை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வந்த எம்.எல்.ஏ!



நடைப்பெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோகவெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. இதில் திமுக கூட்டணியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டு வந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியினை அதிகப்படியான வாக்குகள் விதியாசத்தில் இம்முறை அதிமுக தனித்து நின்று வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் வெற்றிப்பெற ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று அதிமுக தலைமையின் வழிகாட்டலின் படி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்கள் அதிரை வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்து ஊரில் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்பொழுது அதிமுகவின் நகர செயலாளர் திரு.பிச்சை, நகர துணை செயலாளர் தமீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது