Wednesday, May 18, 2016

தமுமுக தலைமை அவசர அறிவிப்பு!

சென்னையிலும் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் தொடர்நது கன மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில் மழை மேலும் கடுமையாகலாம் என்றும் புயலுக்கான அறிகுறிகள் உள்ளன என்றும் எனவே முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஆகவே சென்னைக்கு மீண்டும் மழையினால் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று இறைவனை பிரார்த்திப்போம்.

அதே சமயம் தமுமுக மற்றும் மமக தொண்டர்களும் நிர்வாகிகளும் எந்த சூழ்நிலையையும் சந்திக்ககூடிய தயார் நிலையில் இருக்குமாறும் ஆபத்து காலங்களில் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் விழிப்புடன் இருக்குமாறும் தேவைப்பட்டால் விரைந்து பணியாற்றுமாறும் தலைமையினால் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

-ஜே.எஸ். ரிபாயி தலைவர், தமுமுக.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது