Sunday, May 22, 2016

ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் மோடி பங்கேற்ப்பு!

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, மே 23 ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இந்த விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது