Tuesday, May 24, 2016

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு முறை நீக்கம்...சிறந்த முன்னோட்டம்..!!!
நீதிமன்ற தீர்ப்பின்படி மருத்துவ படிப்பிற்கான நேர்முக நுழைவு தேர்வு முறை நீக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது.  இந்த செய்தி நம் நாட்டின் மக்களாட்சிக்கு உகந்த  ஒன்று ஆகும். சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து வர்கத்தினருக்கும் கல்வியினால் மேன்மை பெறவும், முன்னேற்றமான வாழ்வுக்கு முட்டுகட்டையாக இருந்த மருத்துவ கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு நீக்கப்பட்டது எல்லா நலனையும் கொடுக்கும். மருத்துவ படிப்பு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே என்று இருந்த  அவல நிலைமை மாறி, திறமையும் தகுதியும் உள்ள எல்லா தரப்பு மக்களும் மருத்துவப்படிப்பில் சேர்ந்து அவர்களின்  திறமையால் ஜொலிக்க முடியும்.  மேலும்  மக்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் பொது நலம் உள்ள பல நல்ல உள்ளங்களின் குடும்பத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகள் சிறப்பாக செயலாற்றி நம் நாட்டை நோய்களின் கொடிய தாக்கத்திலிருந்து மீட்டெடுப்பார்கள் என்பது திண்ணம்.

இதை முன்னோட்டமாக கொண்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்குவதில் பின்பற்றும் மிகவும் கடினமான நடை முறைகளை அகற்றுவதற்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் எண்ணிலடங்கா அனுபவ மற்றும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை கிடைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் நாட்டில் வறுமை குறைந்து உலகுக்கே சிறந்த நாடாக நமது இந்திய நாடு விளங்கும்.  பரவலாக அறியப்படுகின்ற வேலையின்றி தவிக்கும் நடுத்தர மக்களாகட்டும், படித்து முடித்த இளைஞர்களாகட்டும் அவர்களின்  வேலை கிடைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் நாட்டில் வறுமை குறைந்து உலகுக்கே சிறந்த நாடாக நமது இந்திய நாடு விளங்கும்.  பரவலாக அறியப்படுகின்ற வேலையின்றி தவிக்கும் நடுத்தர மக்களாகட்டும், படித்து முடித்த இளைஞர்களாகட்டும் அவர்களின் வேலையின்மைக்கு காரணம்  கார்ப்பரேட் நிறுவனங்கள்  பின்பற்றும் அனாவசிய  நடைமுறைகள்  இண்டெர்வியூ  என்ற  பெயரில்  பின்பற்றுவதாகும். இதனால் தகுதி மிக்க ஆற்றல் வாய்ந்த படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்க்கையில் பாதிப்புக்குள்ளகின்றனர். எனவே மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள மத்திய மாநில அரசுகள் பெரும்பான்மையான நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள அனாவசிய தேர்வு முறைகளை அகற்றி வேலை வாய்ப்பில் அனைவருக்கும் பயன் பெறும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்நாட்டு மக்களின் அவா. தூய எண்ணத்தோடு நன்மை பயக்கும் படி இந்த கருத்தை நான் இங்கு வெளியிடுகிறேன். இந்த பதிவை படிக்கும் அனைவர்களிடமும் இருந்து தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது