Thursday, May 19, 2016

கடையநல்லூரில் வெற்றி பெற்ற அபூபக்கருக்கு அதிரை IUML வாழ்த்து !

நடைபெற்று முடிந்த 2016காண சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடம்பெற்று 5 இடங்களில் போட்டியிட்டது . கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை அடுத்து 19ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி தமிழகத்தில் நடைபெற்றது . இதில் திமுக 81இடங்களிலும் அஇஅதிமுக 112இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துள்ளது. 

இந்நிலையில் கடையநல்லூர் தொகுதியில் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட்ட மாநில பொது செயலாளர் அபூபக்கர் அவர்களின் வெற்றி மகத்தானது என்றும் போற்றுதலுக்கு உரியது என்று அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர தலைவர் KK ஹாஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். 

மேலும் சமுதாயத்திற்குள் நிலவும் போட்டிகளையும் தாண்டி மகத்தான வெற்றிய ஈட்டி தந்த கடையநல்லூர் பகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக  அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதேபோல் மாவட்ட செய்தி ஊடக பிரிவின் செயலாளரும் மணிச்சுடரின் மாவட்ட செய்தியாளருமான சாகுல் ஹமீது தெரிவித்துள்ளதாவது. கடையநல்லூர் தொகுதி மக்கள் மாட்சிமைகளை மறந்து ஓரணியாக ஏணி சின்னத்தை ஆதரித்து இருப்பது வரவேற்புக்கு உரியது என்றும். குறுகிய காலத்திற்குள் IUMLன் சின்னமான ஏணி சின்னத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து சென்று பதிய வைத்த அனைத்து கூட்டணி கட்சியை சேர்ந்த நண்பர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது