Tuesday, May 31, 2016

கலைஞர் TV விவாத நிகழ்ச்சியில் பேசிய அதிரை சாலிஹ்! (வீடியோ இணைப்பு)



சில தினங்களுக்கு முன் கலைஞர் தொலைக்காட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே விவாத நிகழ்ச்சியில் அதிரை சாலிஹ் கலந்துகொண்டு மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் தனது கருத்தினை பதிவு செய்தார். இதனை கடந்த 14.05.2016 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி இவரை போன்று நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் இறுதியாக பேசிய முகம்மது சாலிஹ் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணம் வசூல் செய்யும் கல்வி நிறுவனங்கள் குறித்து எளிதில் புகார் செய்யும் வண்ணம் தனியாக கண்காணிப்பு மையம் அமைத்து இலவச தொலைபேசி எண்ணை அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் வீடியோ பதிவு உங்கள் பார்வைக்கு.

1 comment:

  1. தம்பி சாலிஹ், நம்மூரில் பிரபலமான பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவிகள் சேர்க்கைக்கு அதிகமான கட்டணம் கட்டாயமாக வசூலிக்கிறார்கள் என்று பரவலான புகார் எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது