Thursday, June 30, 2016

அதிரையில் உலாவும் யாசகர்கள் போர்வையில் திருடர்கள் !

அதிராம்பட்டினம் பகுதிகளில் ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் ஜக்காத், ஸதகா போன்றவைகளை இஸ்லாமிய மக்கள் அதிகளவில் விநியோகிப்பர். இதன்  காரணமாக அதிரை பகுதியில் ராமளானின் கடைசி பத்து நாட்களும் அதிரை நகரில் யாசகர்கள் கூட்டம் அலைமோதும் . குறிப்பாக செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளில் இக்கூட்டம் அதிகளவில் காணப்படுவர். 

அந்த வகையில் யாசகம் வாங்க வந்த ஒரு பெண்மணி தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளி அருகே உள்ள ஒருவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார் . வழக்கமாக இவரின் ஆடுகள் இறை தேடுவதற்காக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்.  இந்நிலையில் நேற்று நடுத்தெரு பள்ளிக்கூடம் அருகே மேய்த்து கொண்டிருந்த வெள்ளை  நிற பெண் ஆட்டை ஆட்டையை போட்டு சென்றுள்ளது ஒரு யாராக கும்பல்.. இச் சம்பவத்தை நேரில் கண்ட சிறுவன் கூறுகையில். ஒரு பெண் தான் கைப்பையில் வைத்திருந்த பைய்யில்  இருந்தது மேல்துணியை (துப்பட்டா) எடுத்து ஆட்டின் கழுத்தை கட்டி ஆட்டோவில் ஏற்றி சென்றதாக கூறினான் . 

பின்னர் ஆட்டின் உரிமையாளர் போலீசில் அளித்த புகாரை அடுத்து போலீசார் ஆடு திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
IMAGE FILE 

Wednesday, June 29, 2016

மரண அறிவிப்பு


அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி அல்லாபிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.மு ஜபருல்லா அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கி.அ முகைதீன் சாஹிப், மர்ஹூம் மு.கி.அ அபூபக்கர், மு.கி.அ அஹமது அலி ஆகியோரின் சகோதரியும், ஜாஹிர் உசேன், இஸ்மத் ஆகியோரின் தாயாரும்,  மர்ஹூம் நெ.மு.க  சரபுல் மக்காம் அவர்களின் மாமியாருமான ஹாஜிமா மக்புபா அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10.30 மணிக்கு தராவிஹ் தொழுகைக்கு பின்னர்  மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Tuesday, June 28, 2016

அதிரையில் நாளை மின் தடை இல்லை

அதிரையில் மாதம் ஒரு முறை பராமரிப்புக்காக மின் தடை இருக்கும் நிலையில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நமதூர் சமூக ஆர்வலர்கள் பலரும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணியை ஒத்தி வைக்குமாறு அதிரை மின் வாரிய அதிகாரியிடம்  கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்ற மின்சார வாரியம் மின் தடையை விலக்கி கொண்டு உள்ளது. இதனால் நாளை நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி வேறொரு நாளில் நடத்த உள்ளதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Monday, June 27, 2016

மர்ஹூம் அப்துல் காதர் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)


அதிரை பேரூராட்சி 13வது வார்டு முன்னாள் உறுப்பினரும் முன்னாள் நகர திமுக அவைதலைவருமாகிய மர்ஹூம்.அப்துல் காதர் அவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் ஒற்றுமையை பறைசாற்றும் வண்ணமாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதனை இவரின் மறைவுக்கு பின்னும் மகன்கள் தொடர்ந்துவருகின்றனர்.

அந்த வகையில் இன்று 21வது பிறை இஃப்தார் நிகழ்ச்சியினை மர்ஹூம்.அப்துல் காதர் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக அவரது மகன்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.


இன்று சாலை விபத்தில் 4 இளைஞர்கள் பலி! தொடரும் அலட்சியம்!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அதி வேகமாக பைக்கில் போன 4 இளைஞர்கள் பரிதாபமாக வேனில் அடிபட்டு பலியாகியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரையை சேர்ந்த முகமது அனிபா மகன் சிராஜூதீன் (27, அதே ஊரை சேர்ந்த இஸ்மாயில் (30), ஷேக் முகம்மது (28) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூரில் இருந்து நேற்று மதியம் சொக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் மேலக்கடையநல்லூரை சேர்ந்த முத்துநாராயணசாமி (27), முத்துச்சாமிபுரம் மகாராஜன் (30) ஆகிய இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இரு தரப்புக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் அந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் போனவர்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர். இந்த நிலையில், எதிரில் குற்றாலத்தில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனில் மதுரை சிம்மக்கல் பழவியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருந்தனர். இவர்கள் சுற்றுலாவாக வந்து கொண்டிருந்தனர்.

7 killed in two separate accidentes in Nellai dt

கிருஷ்ணாபுரம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக வேகமாக வந்து கொண்டிருந்ததைப் பார்த்த வேன் டிரைவர் மிரண்டு வேகமாக பிரேக் போட்டார். இதில் வேன் நிலை தடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த நேரத்தில் படு வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் வேன் மீது மோதியது.

இந்த கோர விபத்தில், சிராஜூதீன், இஸ்மாயில், மகாராஜன், முத்துநாராயணசாமி ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். ஷேக் முகம்மது படுகாயமடைந்தார். அவரது மூட்டு விலகிப் போய் விட்டது. அதேபோல வேன் கவிழ்ந்ததில் அதில் இருந்த 11 பேர் காயமடைந்தனர்.

ஷேக் முகம்மது ஆபத்தான நிலையில் ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் பைஷல் தலைமையில் அந்த அமைப்பின் தொண்டகள் மீட்ப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, தென்காசி கோட்டாசியர் வெங்கடேஷ், கடையநல்லூர் தாசில்தார் நாகராஜ் ஆகியோர் அங்கு வந்தபோது, விபத்து நடந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட காயமடைந்த சேக் முகம்மதுவின் மூட்டு சிப்பியை மாவட்ட தலைவர் பைஷல் அவர்களிடம் கொடுத்து மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து சப் கலெக்டர் அருகே உள்ள பழக்கடைக்கு சென்று ஐஸ் வாங்கி பதப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் மூலமாக நாகர்கோவில் மருத்துவமனைக்கு தனியாக விழுந்து கிடந்த மூட்டு சிப்பியை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்ததார்.

அணிந்திருந்த உடையால் சிக்கல் 50 பேரை கைதுசெய்த சவுதி போலீசார்.!


சவுதி அரேபியாவின் மக்கா நகரில் நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த மற்றும் இருக்கமாக உடை அணிந்திருந்த 50 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுள் வித்தியாசமான முறையில் தலை முடியை சிறைத்தவர்கள், நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த ஆடைகளை அணிந்தவர்கள், நெக்லஸ் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்தவர்கள் என 50 பேரை சவுதி அரேபிய மக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Sunday, June 26, 2016

ஜப்பானில் அதிரையர்கள் ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)


ஜப்பானில் இன்று அதிரையர்கள் சார்பில் அல்-நூர் மஸ்ஜிதில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு அதிரையின் ருசிமிகு நோன்பு கஞ்சி தயார் செய்து அனைவருக்கும் வழங்கினர்.
Saturday, June 25, 2016

அதிரை லயன்ஸ் சங்க புதிய தலைவராக இர்ஃபான் சேக் பதவியேற்பு!


இன்று சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய தலைவராக இர்ஃபான் சேக் பதவியேற்றார். இந்நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் முன்னாள் தலைவர் N.ஆறுமுகசாமி அவர்கள் தலைமைவகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இரண்டாம் துணை ஆளுனர் MJF Lion.H.சேக் தாவூத், மண்டல தலைவர் MJF Lion.S.K.ராமமூர்த்தி, மண்டல செயலர் Lion. Prof.K.செய்யது அகமது கபீர், மண்டல பொருளர் Lion. Er.K.ஶ்ரீராம், Lion. M.K.ராஜ்குமார், Lion.J.லிக்மிசந்த், Lion. G.K.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியினை Lion. ஹாஜி பேரா. முகம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். 

புதிய நிர்வாகிகள் விபரம்:


பஹ்ரைனின் மதிமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


நேற்றையதினம் பஹ்ரைனில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிர்ய்ந்தது. இதில் இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ்ப் பிரிவு சார்பாக தலைவர் அப்துல் கரீம், துணைத் தலைவர் அதாவுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஹூசைன் ஷாகிப் ஆகியோர்  சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டனர்.

பஹ்ரைனில் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியன் சோஷியல் ஃபோரம் என்ற பெயரில் தன்னார்வலர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் இந்த அமைப்பின் மூலம் இந்தியர்கள் பலருக்கும் வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களற்ற இந்தியாவை கேட்கும் தலைவர்களை மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்: சரத் பவார்

முஸ்லிம்களற்ற இந்தியாவை கேட்கும் தலைவர்களை மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்: சரத் பவார்

இந்துத்தவவாதிகள் முஸ்லிம்களற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற கோஷங்களை சமீபகாலமாக அதிகப்படியாக உச்சரித்து வருகின்றனர். இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.
இது குறித்து அவ்ரங்காபாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், “இத்தகைய கோஷங்கள் பொறுத்துக் கொள்ளப்படாது” என்றும் “இந்த நாடுயாருடைய அப்பன் வீட்டு சொத்தல்ல” என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது போல கருத்துக்களை தெரிவிக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா எல்லா மத நம்பிக்கை உடையவர்களுக்கும் சொந்தமான நாடு என்றும் நாட்டிற்குள் பிரிவினையை உண்டு பண்ண நினைப்பவர்கள் அடிப்படையற்ற விஷயங்கள் மூலம் பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இவர்கள் இத்தகைய கருத்துக்கள் மூலம் மக்களை வழிகெடுக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Thursday, June 23, 2016

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி! (புகைப்படங்கள் இணைப்பு)CRESCENT BLOOD DONORS தஞ்சாவூர்  மாவட்டம் சார்பாக "விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்" என்ற தலைப்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அளிக்க முடிவு செய்து உள்ளனர்.அந்த வகையில் இன்று (23-06-2016) இமாம் ஷாபி பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏன் அதிகமாக நடைபெறுகிறது,எப்படி நடைபெறுகிறது,இதை தடுப்பதுக்கு வழிகள் என்ன என்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு CBD மாவட்டத் தலைவர் பேரா.செய்யது அகமது கபீர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இமாம் ஷாபி பள்ளியின் மூத்த முதல்வர் ஜனாப். பரக்கத் சார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அபுதல்ஹா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கினார்கள் .மேலும் சமூக ஆர்வலர் ஸ்டாலின் அவர்களும்,  CBD மாவட்டத் தலைவர் பேரா.செய்யது அகமது கபீர் அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு வந்து இருந்த அனைவரையும் CBD பொறுப்பாளர் ஹஸன் அவர்கள் வரவேற்றார். CRESCENT BLOOD DONORS குறித்த அறிமுக உரையை CBD மாவட்ட செயலாளர் காலித் அஹ்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியினை அனைத்தையும் பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி அவர்கள் அழகிய தமிழில்  தொகுத்து வழங்கினார்கள்.  இறுதியாக நன்றியுரை CBD பொறுப்பாளர் இப்ராஹிம் அலி அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் CBD மாவட்ட துணை தலைவர் கலிஃபா, CBD நகர பொறுப்பாளர்கள் நூர், ராஜிக் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.மரண அறிவிப்பு! (தரகர் தெரு)


தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம்.A.சாகுல் ஹமீது மகளும் P.M.முகம்மது லெப்பைகனி மனைவியும் குலாம்ரசூல் தாயாரும் ஹாஜி M.S.சாகுல் ஹமீது, M.S.லியாகத்தலி, M.S.அப்துல் முனாஃப், M.S.அன்சார் அலி இவர்களின் மாமியும், N.கச்சுமைதீன், N.ராஜிக் அஹமது, N.அப்துல் பாரி ஆகியோரின் பெரியதாயாரும், S.அஹமது மன்சூர், S.லியாகத்தலி, S.முகமது இக்பால், இவர்களின் சகோதரியுமாகிய துரபியா அம்மாள் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரது நல்லடக்கம் மகரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்.

Wednesday, June 22, 2016

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல் -ஸ்டார் தொகுதியாக மாறி வரும் புதுமனை தெரு

தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று அதிமுக கட்சி அபார வெற்றி பெற்ற நிலையில் தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தல் அக்டோபர் மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்  தமிழக சட்ட சபை மூன்றாம் நாளான  இன்று மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார்.மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்யலாம் என்று திமுக ஆட்சி காலத்தில் இருந்த சட்டத்தை மக்கள்தான் தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் திருத்தினார் ஜெயலலிதா. மீண்டும் கவுன்சிலர்களே மேயர்களை தேர்வு செய்யலாம் என்று தற்போது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரை அரசியல் பிரமுகர்கள் பலரும் 19 வது வார்டு புதுமனை தெருவில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி,மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட பலரும் போட்டியிட ஆர்வம் கட்டி வருகின்றனர். 

அதிரையில் உள்ள வங்கிளில் பெண்கள் பிரிவை தனியாக ஏற்படுத்த வேண்டும் !


அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கணிசமான அளவு பரிவர்த்தனை தினந்தோறும் நடைபெற்று வருகின்றன . இதில் அந்நிய செலவாணியை ஈட்டி தரும் வகையில் தங்கள் வீட்டினர் அனுப்பும் தொகைகளை பெண்களே கையாளும் நிலை உள்ளது. இதனால் வங்கியில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டேதான் கனரா வாங்கி கிளை பழைய கட்டிடத்தில் பெண்களுக்கான தனி பிரிவை உருவாக்கி செயல்படுத்தியது பின்பு புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிற அவ்வவங்கி பெண்கள் பிரிவை நீக்கியது 

இதனை பின் தொடர்ந்து அதிரைக்கு வந்த பல வங்கிகள் பெண்களுக்கு என தனி பகுதியை உருவாக்க முன் வரவில்லை. இதனால் ஆண்களும் பெண்களும் கலப்படமாக உட்காரும் நிலை உருவானது. இதனால் பல நெருடல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்ட அதிரை இஸ்லாமிக் வெல்பேர் அசோசியேஷன் (AIWA) நிர்வாகிகள் அனைத்து வங்கிகளுக்கும் முறையே கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட வங்கிகளின்  மேலாளர்கள் இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பெங்களுக்குக்கென தனி ATM இயந்திரங்களை ஊருக்குள் நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tuesday, June 21, 2016

அதிரையில் வட்டியில்லா கடன் வழங்க தாராளமாக நிதி தாரீர்!


அன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே இந்த மடல் பூரண சுகத்துடன் சந்திக்கட்டுமாக கடந்த ஐந்தாண்டுகளாக நமதூரில் "அதிரை கர்ழன் ஹஸனா" என்ற பெயரில் அழகிய கடன் அறக்கட்டளை ஏழை எளிய மக்களுக்காக வியாபாரத்திற்கு மட்டும் ரூ. 5,000 (ஐந்தாயிரம்) வட்டியில்லா கடனாக கொடுத்து உதவி வருகிறது. அதை மூன்று மாதத்திற்குள் திருப்பி வாங்கிவிடுகிறது. இதுவரை 300 நபர்களுக்கு மேலாக கடனுதவி வழங்கியிருக்கிறது. இன்னும் அதிகமான பேர்கள் வியாபரத்திற்காக கடனுதவி கேட்பதால் எங்களால் கொடுக்க இயலவில்லை. தங்களை போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்பால் இதனை நடத்திவருகிறோம். இதுமென்மேலும் வளர தங்களால் இயன்ற சதக்கா தர்மம் போன்ற உதவிகளை அனுப்பிவைத்தால் கஸ்ட்டப்படும் வியாபாரிகளுக்கு கடனுதவி செய்யப்படும். இது எந்தவித லாபநோக்கமும் இல்லாமல் அல்லாஹ்விற்காக செய்யப்படும் இந்த கடனுதவி திட்டத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை அன்புகூர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுதவியானது அல்லாஹ்விடத்தில் பெரும் உதவியாக இருக்கும் ஆமின்.

குறிப்பு: ஜகாத் கொடுக்க நேர்ந்தால் ஜகாத் என்று குறிப்பிட்டு எழுதவும். இது கடனுதவி திட்டத்திற்கு சேராது. உடனே ஜகாத்தாக உரியவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
AZAIHYA KADAN ARAKKATTALAI
A/c. No 1201201001056
Canara bank.
IFSC: CNRB 0001201

அலுவலகம்: NKS Sound service எதிரில்,
கடைத்தெரு, அதிரை.

தலைவர்: 98426 22353
செயலாளர்: 98423 51647
ஒருகிணைப்பாளர்: 9791438912

அதிரை கார்,வேன் தொழிலாளர்களின் இஃப்த்தார் அழைப்பு !


அதிராம்பட்டினம் கார் வேன் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் அல் அமீன் ஜாமியா பள்ளியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் நாளைய தினம் அல் அமீன் பள்ளியில் நடைபெற உள்ள இப்தார்  நிகழ்ச்சியில்அதிரையை சேர்ந்த அனைத்து முஹல்லா வாசிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அதிரை கார் , வேன் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Monday, June 20, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 3-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மெகா கூட்டம்!


அஸ்ஸலாமு லைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சிகடந்த 18/06/2016 சனிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் அல்லாஹ்வின் கிருபையால்மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                 N.M. ஹுமைனா (D/O NAINA MOHAMED)

முன்னிலை          : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

அறிமுக உரை       சகோஅகமது ஜலீல் துணை செயலாளர் )

சிறப்பு பயான்கள்       ஜனாப் சிபான் மௌலவி

தலைப்புநோன்பின் சிறப்பும் தொழுகையின்   மகத்துவமும்

ஜனாப் அப்துல்லாஹ் மௌலவி

                      தலைப்பு: ஜக்காத்பித்ராவின் முக்கியத்துவம்

அறிக்கை வாசித்தல்   சகோ. அப்துல் ரஷீது செயலாளர் )

நிகழ்ச்சி தொகுப்பு    : ஹாபிழ் J.நெய்னா முகமது இணை செயலாளர் )

நன்றியுரை     சகோ.சாதிக் அகமது இணை தலைவர் )

 

1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 3-வது ஆண்டு இஃப்தார்நிகழ்ச்சியும் 35-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாகஇனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர - சகோதரிகள்இளம்சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்

 

3இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள்அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும்மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்குஉதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

 

4) அதிரை நியூஸ் சார்பாக ABM ரியாத் கிளைக்கு வழங்கிய சிறந்தசேவைக்கான விருதை மிக மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டு அதற்காகஅதிரை நியூஸ்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதுமேலும் இந்தவிருதை பெற உதவிய அனைத்து ரியாத் வாழ் மக்களுக்கு நன்றியைதெரிவித்து கொள்ளப்பட்டது

 

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 15-ம் தேதி JULY 2016 ள்ளிகிழமை மாலை 5 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது

 

 

 ஸாகல்லாஹ் ஹைர்...