100 யூனிட் இலவச மின்சாரம்..! யார்? யாருக்கு எவ்வளவு தள்ளுபடி.!

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி யார், யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்ற அன்றே, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது 5ம் மாத மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

எவ்வாறு கணக்கிட்டு கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில்,

"100 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 91 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்கள் பயனடைகிறார்கள். ஏற்கனவே குடிசைகள் மற்றும் 

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் 

பொதுவாக மின்கட்டணத்தை பொறுத்தவரையில் முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.30–ம், 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.3.50–ம், 201 முதல் 500 யூனிட் வரை ரூ.4.60 கட்டணமும், 501 யூனிட்டுக்கு மேல் ரூ.6.60 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டம் முதல்வர் கையெழுத்து போட்ட மே மாதம் 23ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. 

இதன்படி ஜூலை 23ம் தேதிக்கு பிறகு கணக்கெடுக்கப்படுபவர்களுக்கு முழுமையான 100 யூனிட் சலுகை கிடைக்கும். அதற்கு முன்பு பில் தொகை 

கணக்கெடுக்கப்படுபவர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய மின்சாரம், அரசின் சலுகை அமல்படுத்தப்பட்ட தேதி ஆகியவற்றின் அடிப்படையில் மின் கட்டண சலுகை கிடைக்கும்.

சராசரியாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை 100 யூனிட் மின்சாரத்தின் கட்டணமான ரூ.175 தள்ளுபடி செய்யப்படும். 

இந்த திட்டத்தின் மூலம் வாரியத்திற்கு மாதம் ரூ.134 கோடி வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.1,608 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. இதனை மாநில அரசு வழங்குவதாக அறிவித்து உள்ளது. 

இதற்கான ஆணை தமிழக அரசிடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது" என்று கூறினர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது