Saturday, June 4, 2016

+2, SSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ, மாணவிகள் கெளரவிப்பு !


அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று [ 03-06-2016 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.


இதில் அதிரை அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதல், கேடயம் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட்டன. இதில் மொத்தம் 7 மாணவ மாணவிகளுக்கு ரூ 19,500/- பரிசுத்தொகை வழங்கப்பட்டன. பரிசுத்தொகையை சென்னை சிபோல் நிறுவனம், ஜித்தா அய்டா அமைப்பு ஆகியோர் வழங்கினார்கள். இவற்றை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர் வழங்கி கெளரவித்தார்.



பரிசு பெற்றவர்கள் விவரங்கள் :
2 தேர்வில் அதிரை அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகள்
முதல் இடம் :
பரிசுத்தொகை: ரூ 5000/-
பெயர்: ஹஃபிலா 
த/பெ: ரஹ்மத்துல்லாஹ்
பெற்ற மதிப்பெண்கள்: 1134 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இரண்டாம் இடம்:
பரிசுத்தொகை: ரூ 3000/-
பெயர் : சஹ்ரீன் பானு
த/பெ : ஹாஜா அலாவுதீன்
பெற்ற மதிப்பெண்கள் : 1107 / 1200
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

மூன்றாம் இடம் :
பரிசுத்தொகை: ரூ 2000/-
பெயர்: தஹ்ஸினா மரியம்
த/பெ: ஷாகுல் ஹமீது
பெற்ற மதிப்பெண்கள்: 1091 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

SSLC  பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகள் :
முதல் இடம் ( இருவர் )
ஆஃப்ரின் ஃபாரிஸா
பரிசுத்தொகை: ரூ 3000/-
த/பெ : அன்வர்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை 

முதல் இடம்
அஸ்மா
பரிசுத்தொகை: ரூ 3000/-
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை 

இரண்டாம் இடம்
அஹமது தஸ்லீம் 
பரிசுத்தொகை: ரூ 2000/-
த/பெ: ஜாஃபர் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 483 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

மூன்றாம் இடம் 
கதீஜா
பரிசுத்தொகை: ரூ 1500/-
த/பெ: ஜவஹர் அலி
பெற்ற மதிப்பெண்கள்: 482 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை
 
courtesy:adirainews

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது