Thursday, June 2, 2016

கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான கட்டண கொள்ளை... விழிப்புணர்வு தேவை...!




தற்சமயம் அதிரையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ மாணவிகளுக்கான அட்மிசன் ஜரூராக நடைபெற்று வருகிறது.
அத்துடன் ஒரு பிரபல கல்வி நிறுவனத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு அதிகப்படியான தொகை கேட்பதாகவும் அதுவும் அதிக மார்க்குகள் இருந்தும் கூடுதலாக பணம் கட்ட சொல்வதாக புகார் எழுந்துள்ளது. ஏன் என்று கேட்டால் நம்பகத்தன்மை இல்லாத காரணங்களை கூறி பசப்பி கட்டாய வசூலில் ஈடுபடுவதாக பரவலாக பேசப்படுகிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இது போன்ற அநியாய கட்டண கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் மீது சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது