Sunday, June 12, 2016

ஜித்தாவில் அதிரை அய்டா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி


சவூதி அரேபியா ஜித்தாவில் இயங்கிவரும் அதிரை அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி 11.06.2016 சனிக்கிழமையன்று மாலை ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை அய்டாவின் இணைத்தலைவர் ஏ.ஜே.தாஜுத்தீன் தொகுத்து வழங்க,அய்டாவின் தலைவர் ரஃபியா தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக சிறுமி தஹ்சினா தாஜுத்தீன் அழகிய குரலில் கிராத் ஓதினார். அய்டாவின் இணைப்பொருளாளர் அபூபக்கர் வரவேற்புரை நிகழ்த்த, அய்டாவின் சாதனைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி செயலாளர் ஷம்சுதீன் பவர்பாயிண்ட் மூலம் விளக்கினார். இதற்கு அய்டாவின் இணைசெயலாளர் மீராசா ரஃபியா உதவி புரிந்தார்.

இறுதியில் இணைச்செயலாளர் சரபுதீன் நன்றி நவிழ இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வுக்கு ஏராளமான அதிரை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்  குடும்பத்துடன் திரளாக வந்து கலந்துகொண்டனர்.









தகவல்: ஜஹபர் ஹஸன் 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது