அதிரை வீதிகளில் நள்ளிரவு அதிரடியாக புகுந்த காவல்துறையினர்! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!அதிரை வீதிகளில் நள்ளிரவு பட்டுக்கோட்டை ASP ஆனந்த் மேனன் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சைரன் ஒளிரவிட்டவாறு நுலைந்து ஊருக்குள் இருசக்கர வாகனத்துடன் நின்றுகொண்டிருந்தவர்களின் ஆவணங்களை சோதனையிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்தவகையில் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களில் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் விதமாக பைக் ரேஸ், ஜிக்ஜக் போன்ற செயல்களில் அதிகளவில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று இதுபோன்ற செயலில் ஈடுப்பட்ட இளைஞர்களை சோதனைக்காக நிறுத்திய பொழுது அவர்கள் நிற்காமல் தங்களது வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை ASP அவர்கள் பட்டுக்கோட்டையிலிருந்து அவர்களை சைரன் சத்தத்துடன் துரத்திகொண்டு வந்துள்ளார். அப்பொழுது அவர்கள் அதிரைக்குள் நுலைந்துள்ளனர். இதனால் ASP தலைமையில் வந்த காவல்துறையினர் ஊருக்குள் வந்து அங்கு இருசக்கர வாகனம் வைத்திருந்த நபர்கள் சிலரிடம் ஆவணங்களை சரிப்பார்த்தனர். மேலும் இதுபோன்ற தணிக்கைகள் தொடரும் என்றும் கூறினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் இரவு நேர பைக் ரேஸில் ஈடுப்பட்ட அதிரை இளைஞர்கள் சிலர் விபத்துக்களில் சிக்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ள நிலையில் இரவுநேர பைக் ரேஸினை தவிர்க வேண்டுமென பலரும் வலியுறுத்துகின்றனர்.


Share:

3 comments:

  1. நல்லதுதானே...? காவல் துறையினர் தம் கடமையைச் செய்கின்றனர். இதிலென்ன தப்பு? பகல்-இரவு என்று பார்க்காமல், ரோடுகளில் அலையும் ரோமியோக்களை அடக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  2. நல்லதுதானே...? காவல் துறையினர் தம் கடமையைச் செய்கின்றனர். இதிலென்ன தப்பு? பகல்-இரவு என்று பார்க்காமல், ரோடுகளில் அலையும் ரோமியோக்களை அடக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  3. அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க தண்டிக்க படவேண்டியவரே

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது