அதிரை கணவன்மார்களே! உங்கள் மனைவியின் திறமை தெரியுமா உங்களுக்கு?பெண்களை நாம் வெறும் வீட்டுவேலை செய்யும் அடிமைகளாக மட்டுமே கருதினோம் என்றால் நிச்சயம் நம்மைவிட குறுகிய மனம் படைத்தோர் யாருமில்லை. கணவன் தன் குடும்பநலனுக்காக வெளியில் சென்று பொருள் ஈட்டிவரும் அதேசமயத்தில் மனைவிடம் குடும்ப நடப்புகளை பற்றி கேட்டு அதற்கு ஏற்றாற்போல் இருவரும் இணைந்து முடிவுகளை எடுத்தால் அது சிறப்பாக அமையும். ஏனெனில் இயற்கையாகவே பெண்களுக்கு தன்னை சுற்றிநடக்க கூடிய நிகழ்வுகளை கவனித்து (Observation) நினைவில் நிறுத்தும் ஆற்றல் அதிகம். 

அது எப்படி என்கிறீர்களா?

உதாரணமாக நம் வீட்டு பெண்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போகிறார்கள் என்று வைத்துகொள்வோம். அங்கு மணப்பெண் அணிந்திருக்கும் புடவையின் நிறம், அதில் செய்யப்பட்டிருக்கும் அழகிய வேலைப்பாடுகள் என கடைசியாக அதில் உள்ள குறைகள் வரை நுணுக்கமாக கவனித்து தனிதனியே ஒருவார காலம் பட்டிமன்றம் வைத்தார்போல் பேசி தீர்த்துவிடுவார்கள். அதுவே ஆண்களாக இருந்தால் பிறர் அணிந்திருக்கும் உடையின் நிறத்தை ஒருநாள் நினைவில் வைத்து சொல்வதே கடினமான ஒன்றாக இருக்கும்.

உண்மையில் நீங்கள் பெண்களுக்கு Observation ஆற்றல் குறைவு என கூறினால் பின் எப்படி இவர்களால் இதுபோல் சிறுசிறு விசயங்களை கூட நுணுக்கமாக கவனித்து பிறரிடம் சரளமாக கருத்து பரிமாற்றம் செய்யமுடிகிறது? அதுமட்டுமல்லாமல் இன்றைய சூழலில் அதிகளவில் பெண்களே நடைபெறகூடிய அரசு பொதுத்தேர்வுகளில் சாதனைகள் புரிகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களிடம் இயற்கையாகவே இருக்கும் அதீத நினைவாற்றலும் ஒன்றாகும்.

அதைபோன்றே குடும்ப தலைவியாக வீட்டிலிருந்து அண்றாட தேவைக்குரிய எவையாக இருந்தாலும் பெண்கள் நிச்சயம் அதனை கவனித்து தெரிந்துவைத்திருப்பார்கள். ஆதலால் இவர்களின் ஆலோசனைகளை கணவன்கள் பெறுவதால் காலத்திற்கு ஏற்ற தக்க முடிவுகளை கச்சிதமாக எடுக்க முடிவும். இதன்மூலம் குடும்பநலனுக்காக தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்த பெண்களுக்கு சற்றே ஆறுதலான ஒன்றாக இது அமையும். மேலும் நாம் அவர்களுக்கும் குடும்பத்தில் உரிய பிரதிநிதித்துவம் அளித்தார் போன்றாகிவிடும். 

-அதிரை மனிதன்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது